என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் நாளை முதல் ஸ்டிரைக் - மின் உற்பத்தி பாதிக்கும்
நெய்வேலி: நெய்வேலி அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை தவிர்க்கும் வகையில் புதுச்சேரியில் இன்று பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தி்ல் ஈடுபடப் போவதாக ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஏஐடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்லன.
இதையடுத்து சென்னையில் உதவித் தொழிலாளர் நல ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து இன்று புதுச்சேரியில் பேச்சுவார்த்தை நடந்த வருகிறது. இதிலும் உடன்பாடு ஏற்படாவிட்டால் நாளை முதல் காலவரையற்ற போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
போராட்டம் நடந்தால், நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி கடுமையாக பாதிக்கும். இதனால் மின் உற்பத்தி பெரும் தடையை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications