ஆற்றில் புதைத்து சிறுவன் சித்ரவதை-ஒருவர் கைது
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக ஐந்து வயது சிறுவனை ஆற்று மணலில் புதைத்து சித்ரவதை செய்த கொடூர வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானுக்கு அருகில் உள்ள கீழஅமராவதி அக்ரகார தெருவை சேர்ந்தவர் பால். இவருக்கு விஜயகுமாரி என்ற மனைவியும், மோகனசுந்தரம் என்ற ஐந்து வயது மகனும் உள்ளனர்.
விஜயகுமாரி தனது வீட்டு பக்கத்தில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். அப்போது சிவன் கோவில் தெருவை சேர்ந்த கஜேந்திரன்(31) என்பவர் விஜயகுமாரியின் கடைக்கு வந்து, கடனுக்கு சிகரெட் கேட்டுள்ளார். ஆனால், கடன் தர முடியாது விஜயகுமாரி மறுத்துவிட்டார். இதையடு்தது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
மறுநாள் அதே நேரத்தில் கடைக்கு வந்த கஜேந்திரன் கடையில் இருந்த பையை தூக்கிகொண்டு ஓடிவிட்டார். இதையடுத்து விஜயகுமாரி போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து வலங்கைமான் போலீசார் கஜேந்திரனை விசாரணைக்கு அழைத்து சென்று கடுமையாக கண்டித்து அனுப்பியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கஜேந்திரன், விஜயகுமாரியை பழி வாங்க தி்ட்டமிட்டார். இதையடுத்து அவர் கடந்த 13ம் தேதி தெருவில் விளையாடி கொண்டிருந்த விஜயகுமாரியின் மகன் மோகனசுந்தரத்தை தூக்கி சென்றார்.
வெட்டாறு பகுதியில் வைத்து சிறுவன் என்று பார்க்காமல் மோகனசுந்தரத்தை கம்பால் அடித்து சித்ரவதை செய்துள்ளார். பழிவாங்கும் நோக்கம் ஒன்றிலே குறியாக இருந்த கஜேந்திரனின் ஆத்திரம் அப்போதும் அடங்கவில்லை. அந்த சிறுவனை ஆற்றுமணலில் மார்பு அளவு வரை புதைத்து, அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் அந்த சிறுவனின் அலறல் சத்தம் கேட்ட சிலரும், அவனை காணவில்லை என தேடிய அவனது பெற்றோரும் அங்கு வருவதை பார்த்த கஜேந்திரன் அங்கிருந்து தப்பியோடினான். அந்த சிறுவன் உடனடியாக கும்பகோணம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டான்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட போலீசார் கஜேந்திரனை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
-
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications