'படுகர்களை பிரிக்க பார்க்கும் திமுக'-ஜெவிடம் புகார்
நீலகிரி: திமுக அரசு படுகர் சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்த முயல்வதாக அச் சமுதாயத் தலைவர்கள் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து புகார் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் படுகர் சமுதாய மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். அந்த சமுதயாத்தை சேர்ந்த நாக்குபெட்டா நலச்சங்க தலைவர் ரங்கா கவுடர் உள்ளிட்டோர் நீலகிரியில் கோடநாட்டில் ஓய்வெடுத்து வரும் ஜெயலலிதாவை நேரில் சந்தித்தனர்.
ஜெயலலிதாவிடம் அவர்கள் கூறுகையில்,
படுகர் சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் திமுகவைச் சேர்ந்த அமைச்சர் ராமச்சந்திரனும், முன்னாள் எம்எல்ஏ குண்டனும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர்.
அவர்கள் தங்களது சொந்த லாபத்துக்காக படுகர் சமுதாயத்தை திமுகவுக்கு பணிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் தூண்டுதல் காரணமாக போலீசார் எங்கள் சமுதாயத்தின் முக்கிய தலைவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து வருகின்றனர் என்றனர்.
அவர்களது குறைகளையும், பிரச்சனைகளையும் கேட்டறிந்த ஜெயலலிதா, அதை விரைவில் தீர்த்து வைப்பதற்கு தன்னால் முடிந்த உதவிகளை நிச்சயம் செய்வதாக உறுதி அளித்தார்.
-
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்











Click it and Unblock the Notifications