அடுத்த வாரம் முதல் தமிழகம் முழுவதும் ரயிலில் ரூ. 10க்கு 7 பூரி
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் அடுத்த வாரம் முதல் ஜனதா சாப்பாடு வழங்கப்படும். ரூ. 10க்கு 7 பூரி, மசாலா கிழங்கு ஆகியவை கொடுக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள ரயில்களில் வழங்கப்படும் உணவுகளின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக ரயில்வே அமைச்சகத்துக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்தன. அதே போல், உணவு பொருட்களின் விலைகளும் தாறுமாறாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இதையடுத்து மத்திய ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி இந்த குறைகளை போக்க உடனடியாக உத்தரவிட்டார். மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் ஜனதா சாப்பாடு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.
உணவு விலையை அதிகரிக்கும் மற்றும் உணவின் விலையை குறைந்து வழங்குபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது உரிமம் பறிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் சென்னை சென்ட்ரல், ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களில் மட்டுமே ஜனதா சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது. இதை அனைத்து ரயில் நிலையங்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என பயணிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஜனதா சாப்பாடு கிடைக்க தேவையான நடவடிக்கைகள் ரயில்வே அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். இதற்காக சில தனியார் ஹோட்டல்கள் மூலம் ஜனதா சாப்பாடு தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
அடுத்த வாரம் முதல் சென்னை எழும்பூர், மதுரை, கோயம்புத்தூர், விழுப்புரம், திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஈரோடு, திருவனந்தபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் ஜனதா சாப்பாடு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனதா சாப்பாட்டில் ரூ. 10க்கு 7 பூரி மற்றும் மசாலா கிழங்குடன் வழங்கப்படுவது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் 7 பூரி, 175 கிராம் மசாலா கிழங்கு ஒரு அட்டை பெட்டியில் வைத்து கொடுக்கப்படுகிறது. இதை இந்திய சமையல் மற்றும் சுற்றுலா துறை தயாரித்து கொடுத்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications