இந்திய மாணவர்களை காக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?
டெல்லி: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன என்பதை இணையத் தளத்தில் விளக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தாக்கலான பொது நல வழக்கில் மத்திய அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்தது. ஆனால், அதில் திருப்தியைடயாத நீதிபதிகள் தன்வீர் பண்டாரி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச்,
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு நிலைமை மோசமாக உள்ளது. அவர்கள் தாக்கப்படுவது நிற்கவில்லை. இதைத் தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை பலன் அளிக்கவில்லை மத்திய அரசு எடுத்த முயற்சிகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து அங்கு மாணவர்கள் தாக்கப்படுகிறார்கள். இதை எப்படி பார்த்து கொண்டிருக்கிறீர்கள்?.
இந்திய மாணவர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை மத்திய அரசு வழங்க வேண்டும். மாணவர்களில் பெற்றோரும், உறவினர்களும் பீதியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர் நலத்துறையின் இணையத் தளம் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் இணையத் தளம் ஆகியவை மூலம் உரிய பாதுகாப்பு உத்தரவாதங்களைத் தர வேண்டும்.
அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் அதில் விளக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
முன்னதாக அரசின் சார்பில் வாதிட்ட அட்டர்னி ஜெனரல் வானாவதி, ஆஸ்திரிலேயாவி்ல் இந்திய மாணவர்கள் மீது நடந்த அனைத்துத் தாக்குதல்களும் இன வெறி தொடர்பானவை அல்ல என்றார்.
இந் நிலையில் ஆஸ்திரேலியாவில் நேற்றும் இரு இந்திய மாணவர்கள் பீர் பாட்டில்களால் தாக்கப்பட்டுள்ளனர். இது குறித்து ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் மத்திய அரசு அறிக்கை கோரியுள்ளது.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications