ஆட்டோ ஓட்டுனர் மீது தபால் மூலம் புகார் தரலாம்!

சென்னையில் 50,000 ஆட்டோக்கள் ஓடுகின்றன. விதிகளை மீறியதாக கடந்த 6 மாதத்தில் மட்டும் 1 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந் நிலையில் அஞ்சல் அட்டைகள் மூலம் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது புகார் தெரிவிக்கும் திட்டத்தை சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் ஷகீல் அக்தர் இன்று துவக்கி வைத்தார்.
இதன்படி கூடுதல் கட்டணம் கோருவது உள்பட பயணிகளிடம் தவறாக நடந்து கொள்ளும் ஆட்டோ டிரைவர்கள் மீது அஞ்சல் அட்டை மூலம் போலீசாருக்கு புகார் அனுப்பலாம்.
இதற்காக 10,000 அஞ்சல் அட்டைகள் அச்சிடப்பட்டு வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் வைக்கப்படவுள்ளன.
மேலும் ஆட்டோக்களில் 5 பள்ளிக் குழந்தைகளுக்கு மேலும் வேன்களில் 18 குழந்தைகளுக்கு மேலும் ஏற்றிச் செல்லும் ஆட்டோ, வேன் ஓட்டுனர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் ஷகீல் அக்தர் அறிவித்துள்ளார்.
வரும் 1ம் தேதி முதல் இந்த விதி கடுமையாக பின்பற்றப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர் பள்ளி வேன் ஓட்டுனருக்கு குறைந்தபட்சம் 6 வருட வாகன ஓட்டும் அனுபவம் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications