விழுப்புரத்தில் நடந்த 2 கோர விபத்துக்களில் 6 பேர் பலி
விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த 2 விபத்துக்களில் 6 பேர் பலியானார்கள்.
பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்கு புதுவை அரசின் போக்குவரத்துக் கழக பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
இந்த பஸ் விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் கிழக்கு புதுவை சாலையில் உள்ள சவிதா சினிமா தியேட்டர் அருகில் சென்று கொண்டு இருந்தது.
அப்போது, நாய் ஒன்று குறுக்கே வந்தது. அதனால், பஸ்சை டிரைவர் திருப்பிய போது அதன் அருகில் இருந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற
கோயில் மீது அரசு பஸ் மோதியது.
இதில், பஸ்சில் பயணம் செய்த தர்மபுரி மாவட்டம் கொள்ளுப் பட்டினத்தைச் சேர்ந்த முத்துவேடி (50), காரைக்குடி செக்கிடிகேட்ட்டில் வசிக்கும் சந்தியா ( 30), காரைக்குடியைச் சேர்ந்த ராஜாராம் மகன் காமராஜ் (45),
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கண்ணன் (34) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து புதுவையைச் சேர்ந்த பஸ் டிரைவர் கபிலன் (42) மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இன்னொரு விபத்தில் இருவர் பலி..
அதே விழுப்புரத்தில் நேற்று நடந்த இன்னொரு விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து திருச்சிக்கு அரசு பஸ் நேற்று நள்ளிரவு புறப்பட்டது. காஞ்சிபுரத்தை சேர்ந்த சேகர் (52) ஓட்டினார். 50 பயணிகள் இருந்தனர்.
விழுப்புரம் அருகே பாப்பனபட்டு எதிரே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நான்கு வழிச்சாலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் பஸ் தவறான பாதையில் பயங்கர வேகத்தில் சென்றது. பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
அப்போது, திண்டுக்கலில் இருந்து சென்னைக்கு சோப் பவுடர் ஏற்றி வந்த கனரக லாரி மீது பஸ் பயங்கரமாக மோதியது. இதில் இரு வாகனங்களின் முன் பகுதியும் அப்பளம் போல நொறுங்கின.
பின்னால் இழுத்து செல்லப்பட்ட பஸ், சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கியது. பஸ் டிரைவர் சேகர் (52) தலை நசுங்கியும், கால் துண்டாகியும் பரிதாபமாக பலியானார். லாரி டிரைவர் வந்தவாசி வேலுவும் (50) தலைநசுங்கி இறந்தார்.
கண்டக்டர் திருவண்ணாமலை சத்தியநாராயணன், லாரி மாற்று டிரைவர் வந்தவாசி வென்குன்றம் ரோடு கண்ணன், அயனாவரம் தனலட்சுமி, பாலமுருகன், சென்னை அருணாசலம், திருவொற்றியூர் ஜானகி, விஜயா, எழும்பூர் ராஜாங்கம், செவ்வேரி தேவேந்திரன், சேப்பாக்கம் பாலமுருகன், உள்பட 26 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications