நாளை கூடும் நாடாளுமன்றம்-6ம் தேதி பட்ஜெட்
டெல்லி: நாடளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை கூடுகிறது. 3ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 6ம் தேதி மத்திய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகின்றன.
மக்கவைத் தேர்தல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. புதிய அரசு பதவி ஏற்றுள்ளதையடுத்து இப்போது முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இதற்கான நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. நாளை பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்.
3ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். 6ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக விசாரணை நடத்திய லிபரான் கமிஷன் தனது அறிக்கையை பிரதமரிடம் சமர்பித்துள்ளது. இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால் பாஜக தரப்பு பெரும் அமளியில் ஈடுபடும் என்று தெரிகிறது.
இந்த கூட்டத் தொடரில் பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது. ஆனால், அதில் பிற்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு உள் ஒதுக்கீட்டுடன் தான் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் என்று முலாயம், லாலு, சரத்யாவத் போன்ற தலைவர்கள் கூறி வருகின்றனர். இதனால் இது தொடர்பாக கடும் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் அவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக நேற்று அனைத்து கட்சி தலைவர்களுடன் சபாநாயகர் மீரா குமார் ஆலாசனை நடத்தினார்.
-
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications