தமிழ் ரெஜிமென்ட் எல்லாம் கிடையாது-கோத்தபாய
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: கருணா கூறியுள்ளதைப் போல தமிழ் ரெஜிமென்ட் எதையும் உருவாக்கும் எண்ணம் எங்களிடம் இல்லை. அந்த செய்தி தவறு என்று கூறியுள்ளார் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்சே.
தமிழர்களைக் கொண்ட தனி படைப் பிரிவு உருவாக்கப்படும். அதில் தமிழர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். எங்களது பிரிவைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே அதில் சேர்ந்து வருகின்றனர் என்று கருணா கூறியிருந்தார்.
ஆனால் அதை பொய்ச் செய்தி என்று கூறியுள்ளார் கோத்தபாய ராஜபக்சே.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த கருத்து அடிப்படை அற்றது. அப்படி ஒரு திட்டம் அரசிடம் இல்லை. கருணா கூறியதில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார் கோத்தபாய.
இதையே, பாதுகாப்புத் துறை அமைச்சர் கெகலிய ரம்புகவெல்லாவும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications