கடல் அரிப்பு-உவரியில் மீனவர்கள் உண்ணாவிரதம்
திசையன்விளை: கடல் அரிப்பை தடுக்க உவரியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என உவரி மீனவர்கள் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர்.
நெல்லை மாவட்டம், உள்ள கடற்கரை கிராமமான உவரி கடல் அரிப்பால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. கடற்கரையில் உள்ள மரங்கள், மின்கம்பங்கள் கடல் அரிப்பால் சரிந்துவிட்டன. இதையடுத்து அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த தார் சாலை முற்றிலும் அரிக்கப்பட்டுவிட்டது. தற்போது வீடுகளும் கடல் அரிப்புக்கு ஆளாகி வருகின்றன.
இதையடுத்து உவரி மீனவர்கள் கேரள மாநிலம் விலிஞ்சம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளதை போன்று உடனடியாக தூண்டில் வளைவு அமைக்கப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதை வலியுறுத்தி உவரி புனித பெலவேந்திரர் ஆலயம் அருகில் கிராம மக்கள் பாதிரியார் சுகிலன் அடிகளார் தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர்.
உவரி பஞ்சாயத்து தலைவர் அந்தோணி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். தகவல் அறிந்ததும் ராதாபுரம் துணை தாசில்தார் தாமோதரன் சம்பவ இடத்திற்கு வந்து போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கோரிக்கைகளைஅரசுக்கு தெரிவிப்பதாக கூறினார்.
இதையடுத்து உண்ணாவிரத்தை உதவி பாதிரியார் ஐஸ்டின் அடிகளார் முடித்து வைத்தார். போராட்டத்தை முன்னிட்டு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications