யாலா காட்டில் இன்னும் 20 விடுதலைப் புலிகள் உள்ளனர் - போலீஸ்
Subscribe to Oneindia Tamil
மொனரகாலா (இலங்கை): விடுதலைப் புலிகளை முழுமையாக ஒழித்து விட்டோம் எனக் கூற முடியாது. யாலா காட்டில் ராம் என்பவர் தலைமையில் 20 தீவிர விடுதலைப் புலிகள் இன்னும் மறைந்துளளனர் என்று இலங்கையின் தெற்கில் உள்ள மொனரகாலா மாவட்ட காவல்துறைத் தலைவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து காவல்துறைத் தலைவர் சேனாரத்ன கூறுகையில், கிராமப்புற மக்களும் காவல் துறையினரும் முன்பை விட இப்போதுதான் நிதானமாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும்.
விடுதலைப்புலிகளால் எந்த வேளையிலும் அசம்பாவித சம்பவங்கள் இடம்பெறலாம். மொனரகாலா பகுதியில் அவர்களால் ஏதும் சம்பவங்கள் இடம்பெற்றால் அவற்றுக்கு நான்தான் பொறுப்பேற்க வேண்டும்.
யாலா காட்டில் ராம் தலைமையில் 20 புலிகள் உள்ளனர். அவர்களை ஒழிக்க ராணுவத்தின் விசேஷப் பிரிவு பயன்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications