Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயிற்சி டாக்டர்களின் உதவித் தொகை அதிகரிப்பு: ஸ்டிரைக் தொடர்கிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: போராட்டம் நடத்தி வரும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள், சிறப்பு முதுநிலை பட்ட மேற்படிப்பு மாணவர்களின் (பயிற்சி டாக்டர்கள்) உதவித் தொகையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

ஆனால், இது போதாது என்று அறிவித்துள்ள பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இது தொடர்பாக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

மருத்துவப் பட்டப்படிப்பு பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகை ரூ. 4,500லிருந்து ரூ.6000 ஆகவும், அரசு பணிசாரா மருத்துவப் பட்ட மேற்படிப்பு பயிலும் முதலாண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகையான ரூ.8,000 இனி ரூ.12,000 ஆகவும்,

2ம் ஆண்டு மாணவர்களுக்கான உதவித் தொகை ரூ.8,500லிருந்து ரூ.13,000 ஆகவும், 3ம் ஆண்டு மாணவர்களுக்கு இது ரூ.9000லிருந்து ரூ.14,000 ஆகவும் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதே போல சிறப்பு மருத்துவர் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கும் முதலாண்டில் ரூ.9500லிருந்து ரூ.15,000 ஆகவும், 2ம் ஆண்டில் ரூ.10,000லிருந்து ரூ.16,000 ஆகவும், 3ம் ஆண்டில் ரூ.10,000லிருந்து ரூ.17,000 ஆகவும்,

4, 5 ஆம் ஆண்டுகளில் நரம்பியல் அறுவை மருத்துவ பட்டமேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ.10,000லிருந்து 4ம் ஆண்டில் ரூ.15,000 ஆகவும், 5ம் ஆண்டில் ரூ.16,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புகள் கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த உதவித் தொகை ஆண்டுதோறும் ரூ. 300 உயர்த்தப்படும். அதே போல சிறப்பு முதுநிலை பட்ட மேற்படிப்பு மாணவர்களின் உதவித் தொகையும் ஆண்டுதோறும் ரூ. 600 உயர்த்தப்படும்.

இந்த உதவித் தொகை உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 9.6 கோடி கூடுதலாக செலவாகும்.

இந்த உண்மை தெரியாமல் நன்றாக படித்த பயிற்சி மருத்துவர்களே நோயாளிகளை கவனிக்க வேண்டிய தங்கள் பணியை மறந்து, அவசர அவசரமாக போராட்டம் நடத்த முன்வந்தது மிகவும் வருந்தத்தக்கதாகும். அரசின் முயற்சியை இனியாவது உணர்ந்து போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக போராட்டம் நடத்திய மாணவர்கள் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் உள்ள 11 அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு அடிப்படை சிகிச்சை அளிப்பது, அறுவை சிகிச்சைகள் போன்ற பணிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.

பல நோயாளிகளின் அறுவை சிகிச்சை தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இவர்களது கோரிக்கையை ஆதரித்து வரும் திங்கட்கிழமை முதல் அரசு டாக்டர்களும் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். இந் நிலையில் உதவித் தொகையை அதிகரித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உதவித் தொகை போதாது..பேச்சு தோல்வி:

இதற்கிடையே பயிற்சி டாக்டர்கள் சங்கத்தினருடன் அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. தலைமை செயலகத்தில் நடந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பயிற்சி டாக்டர்கள் சங்க பிரதிநிதிகள் சுதிசன், சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது அரசு உயர்த்தி அறிவித்துள்ள உதவித் தொகையை டாக்டர்கள் சங்கத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை.

இது குறித்து சிவா கூறுகையில்,

அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உதவித்தொகை உயர்த்தியதை ஏற்க முடியாது. நாங்கள் கேட்டதை விட மிகக்குறைவாக தருவதாக கூறுகிறார்கள். அதை ஏற்க இயலாது. அதனால் எங்களுடைய போராட்டம் தொடரும்.

எங்கள் நிலை குறித்து விளக்க முதல்வர், துணை முதல்வரை சந்திக்க வாய்ப்பு கேட்டோம். நேரம் கிடைக்கவில்லை. இருவரையும் சந்தித்து கோரிக்கையை முறையிட திட்டமிட்டு இருக்கிறோம் என்றார்.

பேரணி:

இந் நிலையில் பயிற்சி டாக்டர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இன்று மன்றோ சிலையில் இருந்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வரை ஊர்வலமாக சென்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+