பட்ஜெட்டில் கிராமவாசிகள்-விவசாயிகளுக்கு 'ஜாக்பாட்'!
டெல்லி: மத்திய பட்ஜெட்டில் கிராமப்புற வேலை வாய்ப்புகளுக்கும் வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டு்ள்ளது.
இன்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பட்ஜெட் தாக்கல் செய்து கூறியதாவது:
தேசிய அளவி்ல் அமலாக்கப்பட்ட ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது (காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரவும் காரணமாக இருந்த முக்கியத் திட்டம் இது).
இத் திட்டத்தால் நாடு முழுவதும் 4.47 கோடி கிராமப்புற மக்களுக்கு குறைந்தபட்சம் ஆண்டில் 100 நாள் வேலை கிடைத்தது.
இதுவரை இந்த் திட்டத்தின் கீழ் பணியாற்றுவோருக்கு ஒரு நாள் ஊதியம் ரூ. 80 ஆக இருந்தது. இது இனிமேல் ரூ. 100 ஆக உயர்த்தப்படும்.
விவசாயத் துறையில் 4 சதவீத வளர்ச்சியை நிலை நிறுத்த இந்த அரசு முழு முயற்சி எடுக்கும்.
விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு புதிய கடன்கள் வழங்க 3.25 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு ரூ. 8,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரக வீட்டு வசதித் திட்டத்திற்கு ரூ. 2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சமூக வளர்ச்சிக்கு இந்த அரசு கூடுதல் கவனம் செலுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications