சங்கராச்சாரியார் ஜெயேந்திரருக்கு ஆக. 7ல் பிறந்த நாள் - சதுர்மாஸ்ய விரதம் தொடக்கம்
காஞ்சிபுரம்: காஞ்சி சங்கர மடம் சங்கராச்சாரியார் ஜெயேந்திரருக்கு ஆகஸ்ட் 7ம் தேதி 75வது பிறந்த நாள் வருகிறது. இதையொட்டி ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் சதுர்மாஸ்ய விரதத்தை இன்று தொடங்கினர்.
செப்டம்பர் 4-ம் தேதி வரை நடைபெறும் இவ்விரதத்தை ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் ஆகியோர் அனுசரிப்பார்கள்.
வியாச பூஜையுடன் விரதம் தொடங்கியது. விரத காலத்தில் அத்வைத வேதாந்த சதஸ், வேதவித்வத் சதஸ், வேதபாராயணம் வேதபாஷ்ய சதஸ், அக்னி ஹோத்ரம், பஞ்சங்க சதஸ் நடைபெறும். மாலை வேளையில் சிறப்பு இன்னிசை கச்சேரிகள், உபன்யாசங்கள் நடக்கின்றன.
10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை அக்னி ஹோத்ர சதஸும், 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை பஞ்சங்க சதஸும் நடக்கின்றன.
ஆகஸ்ட் 7-ம் தேதி ஜயேந்திரர் ஜெயந்தி விழாவும், 13-ம் தேதி ஜன்மாஷ்டமியும், 23-ம் தேதி விநாயக சதுர்த்தியும், 28-ம் தேதி சாஸ்த்ர பரிஷா, வேதபாஷ்ய பரிஷா, வித்வத் சதஸ், அத்வைத வேதாந்த சதஸும், செப்டம்பர் 4-ம் தேதி விஸ்வரூப தரிசனமும் நடைபெறும்.
இம்மாதம் 9-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மாலை வேளைகளில் வி.ராதாகிருஷ்ண சாஸ்திரி, ஸ்ரீ பகவத் பாத சரிதம் தொடர் உபன்யாசம் நிகழ்த்துகிறார். இதற்கான ஏற்பாடுகளை சங்கர மடம் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications