வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் கைது-150 பவுன் நகைகள் பறிமுதல்
நாமக்கல்: நாமக்கல் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு வழிப்பறி திருடர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 150 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சந்தைப் பேட்டை புதூரை சேர்ந்தவர் சரஸ்வதி, இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் நேற்று (06.07.09) அன்று பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியே பைக்கில் வந்த இருவர் சரஸ்வதியின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலியை அறுத்துகொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தார்கள்.
இதையடு்தது சரஸ்வதி பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்களை மடக்கி பிடிக்க போலீசார் நேற்று திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பரமத்தி வேலூர் சாலையில், வண்டியில் வந்த திருடர்கள் இருவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் இருவரும் மதுரையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. பல்வேறு இடங்களில் அவர்கள் அடகு வைத்திருந்த 150 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications