பக்லியார் அணையை தகர்க்க லஷ்கர் சதி- தீவிரவாதி கைது
டெல்லி: காஷ்மீரில் உள்ள பக்லியார் அணையை தகர்க்க தாங்கள் திட்டமிட்டதாக இந்திய ராணுவத்திடம் சிக்கிய லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஒருவன் தெரிவித்துள்ளான்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து சுமார் 120 கிமீ., தூரத்தில் இருக்கும் குப்வாரா மாவட்டத்தில் உள்ள செளகிபல் பகுதியில் இந்திய ராணுவத்தினருக்கும், ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளுக்கும் இடையில் கடும் சண்டை நிலவியது.
இதில் ராணுவத்தின் 16வது ஜாட் படை இரண்டு தீவிரவாதிகளை பிடித்தது. அவர்களில் ஷப்கத் என்ற தீவிரவாதியிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் இருவரும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
அந்த தீவிரவாதி மேலும் கூறுகையில்,
எனது பெயர் ஷப்கத். 22 வயதாகிறது. லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்தவர்கள் இந்தியாவில் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம். இதற்காக சுமார் 120 பேருக்கு பாகிஸ்தானின் வசம் இருக்கும் ஆக்ரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத் நகரில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நாங்கள் காஷ்மீரில் இருக்கும் பக்லியார் அணையை தகர்க்க வந்தோம். இதன்மூலம் பயங்கர சேதத்தை உண்டு பண்ண முயற்சித்து வருகிறோம். இதற்காக எங்களை போன்ற 15 பேருக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தானின் சியல்கோட்டில் இருந்து ஜம்முக்கு சுரங்கம் ஒன்றை அமைக்கும் பணியிலும் எங்கள் இயக்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 4 அடி அகலத்தில் இருக்கும் சுரங்கத்தில் தற்போது 7 அடி நீளம் வரை பணி முடிந்திருக்கிறது.
அந்த சுரங்கம் எங்கு துவங்குகிறது என்பது எனக்கு தெரியாது என்றார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications