முதல்வர் கெளரவம் பார்க்க கூடாது..ராமதாஸ்
திண்டிவனம்: சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ள மருத்துவ மாணவர்களை அழைத்து உடனடியாக முதல் அமைச்சர் கருணாநிதி பேச வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவ கல்லூரிகளுடன் இணைந்த பொது மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்களும், முதுநிலை பட்டப் பயிற்சி மருத்துவர்களும் கடந்த இரண்டு வார காலமாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக அரசு பொது மருத்துவமனைகளில் மருத்துவ சேவை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, புறநோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். இந்த நிலை நீடிப்பது பொது நலனுக்கு உகந்தது அல்ல.
போராட்டம் நடத்துகின்ற பயிற்சி மருத்துவர்களின் நிலைப்பாடு மற்றும் அரசின் நிலை ஆகியவற்றை ஆராயும் போது, இடையில் ஒரு மெல்லிய இழை தான் வித்தியாசமாக தெரிகின்றது.
ஆண்டு தோறும் பல்வேறு இலவசங்களுக்கு பல நூறு கோடி ரூபாய்களை செலவு செய்யும் அரசு, பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்பதால் பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தி விடாது.
போராட்டம் நடத்தி வருகிற பயிற்சி மருத்துவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும்.
எனவே, இந்த பிரச்சனையில் தமிழக அரசும், முதல் அமைச்சரும் கெளரவம் பார்க்காமல், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவ மாணவர்களின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்து பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications