சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கிய பயிற்சி டாக்டர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டுள்ள பயிற்சி டாக்டர்கள் இன்று சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குகியுள்ளனர்.

பயிற்சி டாக்டர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் ஆகியோர் உதவித் தொகையை அதிகரிக்கக் கோரி காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று 12வது நாளாக போராட்டம் நீடித்தது.

சென்னை மெமோரியல் ஹால் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்.

இதைத் தொடர்ந்து பயிற்சி டாக்டர்கள் சென்னை மருத்துவ கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி டாக்டர்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில் இன்று முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் பயிற்சி டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.சென்னை உள்பட அனைத்து நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனை முன் பயிற்சி டாக்டர்கள், பட்டமேற்படிப்பு மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,

உதவித் தொகையை அதிகரிக்க கோரி கடந்த 12 நாட்களாக போராடி வருகிறோம். எந்த வித முன் அறிவிப்பும் இன்றி போராட்டம் நடத்தி வருவதாக முதல்வர் கூறுகிறார்.

சுகாதாரத்துறை அமைச்சர், துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆனால், கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அதைத் தொடர்ந்தே காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.

ஆனால், இதுவரை நடந்த நிகழ்வுகளை துறை அதிகாரிகள், இது வரை முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பார்வைக்கே எடுத்து செல்லவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது.

இதனால் எங்களை முதல்வரோ அல்லது துணை முதல்வரோ பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். எங்களுக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை. கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை.

திங்கள்கிழமை முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தோம்என்றனர்.

போராட்டம் காரணமாக ஏற்கனவே அரசு மருத்துவமனைகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அரசு டாக்டர்களுக்கு உதவியாக பயிற்சி டாக்டர்கள்தான் செயல்படுவார்கள். அது தற்போது நின்று விட்டதால் அரசு டாக்டர்கள் விடுமுறை எடுக்க முடியாமல் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் பயிற்சி டாக்டர்களின் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தால் நிலைமை மேலும் மோசமடையும் எனத் தெரிகிறது.

எச்சரிக்கை...

இந் நிலையில் போராட்டம் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து மருத்துவத் துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர்.

அதில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், டாக்டர்களின் பெயர் பட்டியலை அந்தந்த மருத்துவ கல்லூரி முதல்வர்கள் உடனடியாக மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்தப் பட்டியலை மருத்துவ கல்வி இயக்குனரகம் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பும். இதையடுத்து பல்கலைக்கழகம் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.

ஒரு பயிற்சி டாக்டருக்கு பயிற்சியின்போது மாதத்திற்கு ஒரு நாள் வீதம் வருடத்திற்கு 12 நாட்கள் மட்டுமே விடுப்பு எடுக்கலாம். ஆனால் இவர்கள் இன்றுடன் 13வது நாளாக போராட்டம் நடத்தி வருவதால் இந்த நாட்கள் கல்லூரிக்கு வராத நாட்களாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

இதனால் அவர்களுக்கு பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் கிடைப்பது கஷ்டமாகும்.

மேலும் பயிற்சி டாக்டர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் பெற்றோருக்கு அரசு சார்பில் தந்தியும் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நாளைக்குள் (14ம் தேதி) பணிக்குத் திரும்ப வேண்டும். இல்லாவிட்டால் அவர்களது பயிற்சி காலம் மேலும் தாமதமாகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் பயிற்சி டாக்டர்களுக்கு ஆதரவாக இன்று இளநிலை எம்பிபிஎஸ் படிக்கும் மாணவ- மாணவிகளும் கறுப்பு பேட்ஜ் அணிந்து வகுப்புகளுக்கு வந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+