நாகர்கோவில் ஆர்எஸ்எஸ் அலுவலத்துக்கு தீ-பொறுப்பாளருக்கு கத்திக் குத்து
நாகர்கோவில்: நாகர்கோவில் ஆர்எஸ்எஸ் அலுவலத்திற்கு தீ வைத்த வாலிபர்கள், அதன் பொறுப்பாளரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.
நாகர்கோவில் செட்டிக்குளம் விநாயகர் கோவில் தெருவில் உள்ளது ஆர்.எஸ்.எஸ். குமரி மாவட்ட தலைமை அலுவலகம். இந்த அலுவலகத்தின் பொறுப்பாளராக முத்துக்குமார் என்பவர் உள்ளார்.
அவரும் கல்லூரி மாணவர்களான ராஜேஷ், நாகராஜன் ஆகியோரும் இந்த அலுவலகத்தி்ல் தங்கியிருந்தனர்.
இந் நிலையில் நேற்று மாலை நாகராஜன் மட்டும் அங்கிருந்தபோது 2 வாலிபர்கள் அங்கு வந்து முத்துக்குமார் எங்கே என்று கேட்டு நாகராஜனுடன் தகராறில் ஈடுபட்டனர்.
வாய்த்தகராறு முற்றவே நாகராஜனை கத்தியால் குத்தினர். பின்னர் அலுவலகத்துக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனர்.
தொடை மற்றும் கையில் கத்திக் குத்து விழுந்த நாகராஜனுக்கு வலிப்பு ஏற்பட்டது. வாலிபர்கள் வைத்த தீயில் அங்கிருந்த ஆவணங்கள், தொண்டர்களுக்கான உடைகள் எரிந்து நாசமாயின.
அப்போது அலுவலகத்துக்கு வந்த ராகேஷ் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். பொது மக்கள் ஓடிவந்து நாகராஜனை மருத்துமனைக்குக் கொண்டு சென்றனர்.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
சம்பவ இடத்தை டி.ஐ.ஜி. கண்ணப்பன் தலைமையிலான போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகி்றனர். அந்த அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications