பயிற்சி டாக்டர்களுக்கு உதவித் தொகை மீண்டும் உயர்வு
சென்னை: பயிற்சி டாக்டர்களுக்கான உதவித் தொகையை மீண்டும் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதலில் அறிவிக்கப்படதை விட சற்று கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஒரு அறிக்கை படித்தார்.
அதில், பயிற்சி மருத்துவர்களுக்கு ஏற்கனவே இருந்த ரூ. 4,500 என்பதை ஏற்கனவே ரூ. 6 ஆயிரமாக வழங்கப்படும் என்று அறிவித்ததற்கு மாறாக மாதம் ரூ. 7 ஆயிரமாக வழங்கப்படும்.
பட்டமேற்படிப்பு முதலாம் ஆண்டு மருத்துவர்களுக்கு ஏற்கனவே ரூ. 8 ஆயிரம் என்று இருந்ததை இனி ரூ. 15 ஆயிரம் என்றும், இரண்டாம் ஆண்டு மருத்துவர்களுக்கு ரூ. 8,500 என்று இருந்ததை ரூ. 16 ஆயிரம் என்றும், 3-ம் ஆண்டு மருத்துவர்களுக்கு ரூ. 9 ஆயிரம் என்று இருந்ததை ரூ. 17 ஆயிரம் என்றும் உயர்த்தி வழங்கப்படும்.
சிறப்பு முதுகலை படிப்பு படிக்கும் முதலாம் ஆண்டு மருத்துவர்களுக்கு ஏற்கனவே ரூ. 9,500 என்று இருந்ததை ரூ. 18 ஆயிரம் என்றும், இரண்டாம் ஆண்டு மருத்துவர்களுக்கு ஏற்கனவே ரூ. 10 ஆயிரம் என்பது ரூ. 19 ஆயிரம் என்றும், 3-ம் ஆண்டு மருத்துவர்களுக்கு ஏற்கனவே ரூ. 10 ஆயிரம் என்று இருந்தது. இனி ரூ. 20 ஆயிரம் என்று உயர்த்தி வழங்கப்படும்.
எம்.சி.எச். படிக்கும் மருத்துவர்களுக்கு ஏற்கனவே ரூ. 10 ஆயிரம் என்று இருந்தது. இனி ரூ. 18 ஆயிரம் என்றும் 5-ம் ஆண்டு மருத்துவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் என்று இருந்தது. ரூ. 19 ஆயிரம் என்றும் உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
நேற்று தங்களது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை பயிற்சி டாக்டர்கள் திரும்பப் பெற்றனர். இதையடுத்து இன்று மீண்டும் உதவித் தொகை உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications