செயற்குழுக் கூட்டத்திற்கு வர வேண்டாம் - 10 எம்.எல்.ஏக்களுக்கு ஜெ. தடை

அதிமுக செயற்குழு அவசர கூட்டம் நீலகிரி மாவட்டம், குன்னூர் உபாசி சாலையில் உள்ள விவேக் ஓட்டலில் நாளை பிற்பகல் 3 மணிக்கு கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறுகிறது.
செயற்குழு கூட்டத்தில், இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவது குறித்தும், கூட்டணி தொடர்பாகவும் ஆலோசிக்கப்படவுள்ளது.
அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் செயற்குழு உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் அவர்களில் 10 பேரை மட்டும் செயற்குழுக் கூட்டத்திற்கு வர வேண்டாம் என ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
ஜெவால் வர வேண்டாம் உத்தரவிடப்பட்டுள்ள பத்து எம்.எல்.ஏக்கள்...
பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன், கோ.அரி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வி.பி.கலைராஜன், அருண்மொழித்தேவன், மகேந்திரன், துரைராஜ், சாமி, சின்னசாமி ஆகியோரே.
இவர்களில் ஓ.பன்னீர் செல்வம் சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருக்கிறார். நாளை காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பன்னீர் செல்வம் பேசவுள்ளார். எனவே இவரை வர வேண்டாம் என்று சொல்லியிருப்பதில் விசேஷம் இல்லை.
ஆனால் மற்ற 9 பேருக்கு ஏன் திடீர் தடை என்று தெரியவில்லை. ஒரு வேளை முக்கியமான விவாதத்தின்போது அதிமுக தரப்பில் சபையில் யாரும் இல்லாமல் போய் விடக் கூடாது என்பதற்காக பத்து பேரை மட்டும் உட்கார வைக்கலாம் என நினைத்து ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கலாம் என ஒரு கருத்து உள்ளது.
ஆனால் அப்படியெல்லாம் இல்லை, ஜெயலலிதா ஏதோ ஒரு திட்டத்துடன் இருக்கிறார். அவரது முடிவில் ஏதாவது மறைந்திருக்கலாம் என்று இன்னொரு தரப்பு கூறுகிறது.
-
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications