சலுகைகள் கிடைத்தபின்னும் அரசு ஊழியர்கள் போராடுவது நல்லதல்ல - சூரியமூர்த்தி
நெல்லை: கடந்த ஆட்சியில் அரசு ஊழியர்கள் இழந்த சலுகைகளை பெற்றுள்ள நிலையில் அடிக்கடி போராட்டம் நடத்துவது நல்லது அல்ல என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் சூரியமூர்த்தி தெரிவித்தார்.
நெல்லை வந்த சூரியமூர்த்தி நிருபர்களிடம் பேசுகையில்,
கடந்த ஆட்சியில் இழந்த பல சலுகைகளை பெற்றுள்ள நிலையில் அடிக்கடி போராட்டம் நடத்துவது நல்லது கிடையாது.
தமிழகத்தில் 13 லட்சத்து 30 ஆயிரம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், 5 லட்சத்து 40 ஆயிரம் ஓய்வூதியர்கள் உள்ளடங்கிய அரசில் சில குறைபாடுகள் தவிர்க்க முடியாதது. இதற்காக தனியார் முதலாளிகளை தொழிலாளர் எதிர்த்து போராடுவது போல அரசு ஊழியர்கள் போராட முடியாது.
சமூக அணுகுமுறை, பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வு காண விரும்புகிறோம். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு மிகப்பெரிய குறை ஏற்பட்டுள்ளதுபோல் ஒரு சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை.
25 ஆண்டுகாலமாக நிரந்தர பணி, ஊதியமின்றி இருந்தவர்களுக்கு பணி நிரந்தரம் செய்து, ஓய்வூதியம் வழங்கிய அரசுக்கு நன்றி பாராட்டுவது தான் நல்ல பண்பாடு.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில மாநாடு சென்னையில் அடுத்த மாதம் இறுதியில் நடக்கிறது. இதில் தமிழக முதல்வர், துணை முதல்வர், மத்திய, மாநில அமைச்சர்கள், 6 லட்சம் அரசு அலுவலர்கள் பங்கேற்கின்றனர் என்றார் அவர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications