கொட்டுது லாபம்: பரபர பங்குச் சந்தை!
மும்பை: வாரத்தின் முதல்நாளான இன்று இந்தியப் பங்குச் சந்தையில் பரபரப்பான வர்த்தகம் நடந்து வருகிறது. குறிப்பாக ஐடி துறை சார்ந்த பங்குகளில் இன்று லாபம் கொட்டுகிறது என்றால் மிகையல்ல.
வர்த்தகம் துவங்கியபோதே 220 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் இப்போது 320 புள்ளிகள் உயர்வுடன் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இதன்மூலம் மீண்டும் 15000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது சென்செக்ஸ்.
இந்த துறை பங்குகள் மட்டும் சராசரியாக 7 சதவிகிதம் வரை லாபத்தில் கைமாறிக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக டிசிஎஸ் நிறுவன பங்குகள் மட்டும் 15 சதவிகித லாபத்தில் ரூ.499-க்கு கைமாறிக் கொண்டிருக்கின்றன. விப்ரோவின் பங்குகள் 11 சதவிகித லாபத்திலும், இன்போஸிஸ் பங்குகள் 5 சதவிகித லாபத்திலும் கைமாறுகின்றன.
டிசிஎஸ் பங்குகள் இந்த அளவு அதிக லாபத்தில் கைமாறுவது இந்த ஆண்டில் இதுவே முதல்முறை.
டிஎல்எப், டாடா மோட்டார்ஸ், கிராஸிம் போன்ற பெரிய நிறுவனப் பங்குகளும் 3 முதல் 5 சதவிகிதம் வரை லாபத்தில் கைமாறிக் கொண்டுள்ளன.
கோல்டுமென் சாக்ஷ், ஜேபி மார்கன் மற்றும் சிட்டி குரூப் நிதி நிறுவனங்களின் நிதி நிலை மீண்டும் லாபகரமாக மாறியிருப்பது ஐடி துறையில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதன் எதிரொலிதான் இந்த அதிரடி மாற்றம் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து 5-வது நாளாக இந்தியப் பங்குச் சந்தை ஏறுமுகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications