நர்சிங் மாணவிகள் பலாத்காரம் - தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ கைது
ஹைதராபாத்: கேரளாவைச் சேர்ந்த நர்சிங் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ டிவி. ராமாராவ் கைது செய்யப்பட்டார்.
மேற்கு கோதாவரி மாவட்டம் கொவ்வூர் எம்.எல்.ஏ. ராமாராவ். இவர் நிடதவோலு என்ற இடத்தில் உள்ள ராமாராவுக்குச் சொந்தமான டிவிஆர் நர்சிங் கல்லூரியை நடத்தி வருகிறார்.
2 வாரங்களுக்கு முன்பு இந்தக் கல்லூரியில் படித்து வரும் ஐந்து கேரள மாணவிகள், தங்களை ராமாராவ் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதற்கு முயற்சித்ததாகவும் மாநில உள்துறை அமைச்சர், மனித உரிமை ஆணையத்திடம் புகார் கொடுத்தனர்.
அதற்கு முன்னதாக ஜூன் 18ம் தேதி போலீஸார், ராமாராவ் மீது ஒரு மாணவியைக் கற்பழித்துக் கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்திருந்தனர். ஆனால் அதற்குரிய ஆதாரம் கிடைக்காததால் போலீஸார் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர்.
இந்த நிலையில் ஐந்து கேரள மாணவிகளை பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதில் பாதிக்கப்பட்ட ஐந்து மாணவிகளும், உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டியை நேரில் சந்தித்து புகார் அளித்தனர். மேலும் சிஐடி போலீஸ் முன்பும் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
மாநில ஆளுநரையும் நேரில் சந்தித்து புகார் தெரிவித்தனர். இதையடுத்து அறிக்கை தருமாறு மாநில மனித உரிமை ஆணையம் போலீஸாருக்கு உத்தரவிட்டது. அதில், ராமாராவ் மீதான புகாரில் உண்மை இருப்பதாக போலீஸார் அறிக்கை அளித்தனர்.
இதையடுத்து ராமாராவ் இன்று கைது செய்யப்பட்டார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications