புலிகள் முழுமையாக தோற்கவில்லை-ரம்புகவெல்ல
கொழும்பு: விடுதலைப் புலிகளுடனான ராணுவப் போர் முடிந்து விட்டாலும் கூட முழுமையாக அவர்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக கருத முடியாது என்று கூறியுள்ளார் இலங்கை பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கெஹலிய ரம்புகவெல்ல.
இதுகுறித்து அவர் அளித்துள்ள தொலைக்காட்சிப் பேட்டியில், புலிகள் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு விட்டதாக நாம் கருத முடியாது.
தற்போது விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் செயற்படுகின்றனர். பத்மநாதன், காட்டில் வாழும் திருடனைப் போல எங்கோ இருந்து கொண்டு செயற்படுகின்றார். சூசை ஒரு சமயத்தில் குறிப்பிட்டார் உண்மையான யுத்தம் தரையில் அல்ல கடலிலேயே இருப்பதாக. எனினும், அவை அனைத்தும் தற்போது வெற்றி கொள்ளப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக வெள்ளையர்களும் செயற்பட்டார்கள். உலகில் எந்தவொரு அமைப்பிற்கும் இல்லாத பலத்தை விடுதலைப் புலிகள் கொண்டிருந்தார்கள். அவர்கள் விமானம் வைத்திருந்தார்கள். எனினும், அந்த பலத்தை இலங்கை படைவீராகள் முறியடித்து விட்டனர்.
விடுதலைப் புலிகள் மீண்டும் எழுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது.
போர் முடிவடைந்தாலும் அதன் மாயை இன்னமும் முடியவில்லை. கரையோரப் பாதுகாப்பு அண்மையில் பலப்படுத்தப்பட்டது.
எப்படி இருப்பினும் மீண்டும் புலிகள் ஆயுதங்களை ஏந்தும் அளவுக்கு நாங்கள் இருந்து விட மாட்டோம் என்றார் ரம்புகவெல்ல.
கொரில்லாத் தாக்குதலுக்கு ஆயத்தம்...
இதற்கிடையே, கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் கொரில்லாத் தாக்குதலில் ஈடுபடத் தயாராகி வருவதாக இலங்கை உளவுப் பிரிவு அரசை எச்சரித்துள்ளதாம்.
வன்னிப் பகுதியில் நடந்த இறுதிப் போரின்போது கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட போராளிகள் தப்பி காடுகளுக்குள் போய் விட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் கிழக்கில் உள்ள அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் ஊடுறுவியிருப்பதாக கூறப்படுகிறது.
அவர்களை ஒருங்கிணைக்கவும், வழி நடத்தவும் உரிய நபர்கள் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் வனங்களுக்குள்ளேயே முடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் அவர்கள் கொரில்லாத் தாக்குதல்களில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக இலங்கை அரசை, அந்நாட்டு உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications