'தூங்குகிறவனை எழுப்பலாம்; பாசாங்கு செய்பவனை'!
சென்னை: கோயம்பேட்டில் ரூ. 120 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டதாக பாமகவினர் பொய்யான குற்றச்சாட்டைக் கூறிக் கொண்டிருப்பதாக அமைச்சர் பரிதிஇளம் வழுதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தூங்குகிறவனை எழுப்பலாம்- ஆனால் தூங்குவதைப் போல பாசாங்கு செய்கிறவனை எழுப்ப முடியாது என்பது பழமொழி. அதைப் போலத்தான் ஒருசில பேர் திட்டமிட்டுக் கொண்டு குறிப்பாக பாமகவினர்திமுக அரசு மீது சாட்டுவதற்கு எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் கிடைக்காத நிலையில் கோயம்பேட்டில் ரூ. 120 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டதாக தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு மதிப்பளித்து ஒரு சில ஏடுகளும் அதனைப் பெரிதுபடுத்தி கொட்டை எழுத்துக்களில் ரூ. 120 கோடி நில ஆக்கிர மிப்பு என்றெல்லாம் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சட்டமன்றப் பேரவையில் இதற்காகவே ஒரு சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதற்கு நான் நீண்ட விளக்கமும் அளித்திருக்கிறேன்.
ஓசோன் ப்ராஜக்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட் என்பது தனியார் நிறுவனம். அந்த நிறுவனம் கோயம்பேட்டில் 42.31 ஏக்கர் நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்தது. அந்த 42.31 ஏக்கர் நிலத்தில் 1.77 ஏக்கர் மட்டுமே, திருமங்கலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமானது. மீதமுள்ள 40.54 ஏக்கர் நிலம் அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான பட்டா நிலம்.
கோவிலுக்குச் சொந்தமான 1.77 ஏக்கர் நிலத்தைக்கூட, அரசோ, கோவில் நிர்வாகமோ அந்தக் கம்பெனிக்குக் கொடுத்து விடவில்லை.
அந்த நிலம் குறித்து உச்சநீதிமன்றத்திலே வழக்கு நிலுவையிலே உள்ளது. ஆனாலும் பாமகவும், வேறு சில நபர்களும் ஏதோ ரூ. 120 கோடி பெறுமானமுள்ள இடத்தை அந்த ஓசோன் நிறுவனத்திற்கு அரசு தாரை வார்த்து விட்டதைப்போல தொடர்ந்து செய்தியை அதிர்ச்சியூட்டத்தக்க வகையில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் தரப்பட்ட இடைக்கால ஆணையின்படி கோவிலுக்குச் சொந்தமான 1.77 ஏக்கர் நிலத்தில் எந்தவிதமான கட்டுமானப் பணியும் மேற்கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஓசோன் நிறுவனத்தின் கட்டிடம் கட்டுவதற்கான மனுவினை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஏற்று, அனுமதி வழங்கியுள்ளது. தமிழக அரசோ, மாநகராட்சி மன்றமோ இதிலே எந்த வகையிலும் தலையிடவில்லை.
பிரச்சினைக்குரிய கோவில் நிலமாக கூறப்படும் 1.77 ஏக்கர் நிலத்தில், ஓசோன் நிறுவனம் எந்தவிதமான கட்டுமானப் பணியினையும் மேற்கொள்ளவில்லை. கோவில் நிலமான அந்த 1.77 ஏக்கர் நிலத்தையும் கோவிலுக்கே உரிமையுடையதாக ஆக்க, உச்சநீதிமன்றத்திலே வழக்கு நிலுவையிலே உள்ளது.
உண்மை நிலை இவ்வாறிருக்க பாமகவினரும், சில தனிப்பட்ட நபர்களும், வேண்டுமென்றே இந்தச் செய்தியினைத் திரித்து பூதாகரமாக பிரசாரம் செய்து வருவதும், அதற்கு முக்கியத்துவம் கொடுத்து சில நாளேடுகள் பெரிய தலைப்பிட்டு வெளியிடுவதும் உள் நோக்கத்தோடு களங்கம் சுமத்த வேண்டுமென்ப தற்காகத்தானே தவிர வேறல்ல என்று கூறியுள்ளார் பரிதி.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு!












Click it and Unblock the Notifications