பெங்களூர் திருவள்ளுவர் சிலை திறக்க தேர்தல் கமிஷன் அனுமதி
பெங்களூர்: பெங்களூரில் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி திட்டமிட்டபடி திருவள்ளுவர் சிலையைத் திறக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரத்தில் திறப்பு விழாவில் அரசியல் பேசக்கூடாது என்று தடை விதித்துள்ளது.
பெங்களூர் அல்சூர் ஏரிக் கரை அருகே அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை முதல்வர் கருணாநிதி வரும் ஆகஸ்ட் 9ம் தேதி திறந்து வைக்க திட்டமிட்டிருந்தார். அதே போல ஆகஸ்ட் 13ம் தேதி சென்னையில் கன்னடக் கவிஞர் சர்வஞர் சிலையை கர்நாடக முதல்வர் எதியூரப்பா திறக்க இருந்தார்.
இந் நிலையில் தமிழகத்தில் 5 சட்டசபைத் தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 18ம் தேதி இடைத் தேர்தல் நடக்கும் நிலையில் அதே நாளில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் கோவிந்தராஜ் நகர், சென்னபட்டனா உள்பட 5 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடக்கிறது.
இதனால் திருவள்ளுவர், சர்வஞர் சிலைகளைத் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இரு மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் சிலைகளைத் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஆனாலும் சிலை திறப்புத் தேதிகள் முன்பே முடிவு செய்யப்பட்டுவிட்டதாலும், இடைத் தேர்தல் நடக்கும் தொகுதிக்குள் சிலை இல்லை என்பதாலும், அதைத் திறக்க அனுமதிளிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் எதியூரப்பா அனுமதி கோரி கடிதம் எழுதியிருந்தார்.
இந் நிலையில் சிலையைத் திறக்க மத்திய தேர்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது. அதே நேரத்தில் சிலை திறப்பு விழாவில் அரசியல் பேசக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது.
ஆனால் இந்த சிலை திறப்பை சில கன்னட அமைப்புகள் எதிர்த்துள்ளதும், சிலை திறக்கும் நாளில் மாநில அளவில் பந்த் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் தமிழ் சங்கம் சார்பில் அல்சூர் ஏரிக்கரையில் 1991ம் ஆண்டு திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. அப்போது சிலை திறக்க கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் தடை வாங்கின. இதனால் கடந்த 18 ஆண்டுகளாக சிலை திறக்கப்படவில்லை. சிலை திறப்பைத் தடுத்ததில் அப்போதைய முதல்வர் பங்காரப்பாவும் முக்கிய பங்குண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னைக்கு அனுப்பப்பட்ட சர்வஞர் சிலை..
இதற்கிடையே சென்னையில் நிறுவனப்படவுள்ள கன்னடக் கவிஞர் சர்வஞரின் சிலை நேற்று பெங்களூரிலிருந்து அங்கு அனுப்பப்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications