போலியோ சொட்டு மருந்து குறித்த வதந்திகள்-தடுக்க பிரசாரத்தில் குதிக்கும் அரசு
மதுரை: போலியோ சொட்டு மருந்துத் திட்டம் குறித்து வதந்திதகள் பரப்புவதைத் தடுக்கும் வகையில், தமிழக அரசு மாநிலம் முழுவதும் விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளது.
தமிழகத்தில் சமீப காலமாக நடந்த போலியோ தடுப்பு மருந்துத் திட்டத்தின்போது வதந்திகள் கிளம்பியது. இதனால் ஏராளமான பெற்றோர் பெரும் குழப்பமும், பீதியும் அடைந்தனர்.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒட்டுமொத்த போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்தத் திட்டத்தை பிரச்சினைகள் இன்றி செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக வதந்திகளை மக்கள் நம்பாமல் இருக்கும் வகையில், விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் எஸ்.இளங்கோ கூறுகையில் ரோட்டரி சங்கங்கள், அரசு சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து இதுபோன்ற வதந்திகளை முறியடிக்கும வகையில் செயல்பட வேண்டும்.
மக்களிடையே, குறிப்பாக பெற்றோர்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். குழந்தைகதளுக்கு பாதுகாப்பான முறையில் சொட்டு மருந்து தருவது குறித்தும், சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் விளக்கி மக்களிடையே பிரசாரம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
போலியோ திட்டத்தின் முதல் எதிரியே விஷமத்தனமாக பரப்பப்படும் வதந்திகள்தான்.
தமிழகத்தில் கடந்து ஐந்து ஆண்டுகளாக போலியோ குறைபாடு எதுவும் பதிவாகவில்லை. இருப்பினும் டெல்லி, உ.பி., பீகார், ராஜஸ்தான் மாநிலங்களில் சிலருக்கு போலியோ தாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே நாம் விழிப்புணர்வுடன் இருந்து போலியோவை முழுமையாக ஒழிக்க துணை நிற்க வேண்டும் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications