திருவள்ளுவர் சிலை திறப்பு-ஆகஸ்ட் 9ல் 'பெங்களூர் பந்த்'!

காவிரிப் பிரச்சனை, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீ்ர் திட்டம் ஆகியவற்றை காரணம் காட்டி இந்த சிலை திறப்பை கன்னட அமைப்புகள் எதிர்க்கி்ன்றன.
இந்த எதிர்ப்புகளையும் மீறி சிலை திட்டமிட்டபடி திறக்கப்படும் என கர்நாடக முதல்வர் எதியூரப்பா அறிவித்துள்ள நிலையில் பந்துக்கு அழைப்பு விடுத்து அந்த தினத்தில் பெங்களூரையே ஸ்தம்பிக்க வைக்க கன்னட அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
வாட்டாள் நாகராஜின் கன்னட சாளுவளி வட்டாள் பக்ஷா, பிரவீன் ஷெட்டி தலைமையிலான கன்னட ரக்ஷன வேதிகே, கன்னட சேனை, கன்னட வேதிகே ஆகிய அமைப்புகள் கூடி இந்த பந்த் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
இதே தினத்தில் பந்த் நடத்த நாராயண கெளடா தலைமையிலான இன்னொரு கன்னட ரக்ஷன வேதிகே என்ற அமைப்பும் பந்துக்கு ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் சிலை திறப்பையொட்டி சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வெடிக்கலாம் என்ற அச்சம் தமிழர்களிடையே பரவ ஆரம்பித்துள்ளது.
பெங்களூர் தவிர அதையொட்டிய சாம்ராஜ் நகர் மாவட்டத்திலும் பந்த்துக்கு இந்த அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
இது குறித்து வாட்டாள் நாகராஜ் கூறுகையில், பிரச்சனையின் தீவிரம் தெரியாமல் முதல்வர் எதியூரப்பா சிலையைத் திறக்கப் போவதாக அறிவித்துள்ளார். சென்னையில் சர்வஞருக்கு சிலை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. காவிரி விவகாரம் வெடிக்கும்போது சர்வஞரின் சிலையை கல்லை எறிந்தே தமிழர்கள் உடைத்துவிடுவார்கள்.
நமது கவிஞரை தமிழர்கள் அவமரியாதை செய்ய நாம் ஏன் அனுமதிக்க வேண்டும். அவரது சிலையை முதலில் விதான செளதாவி்ல் கர்நாடக அரசு வைக்க வேண்டும் என்றார்.
கன்னட வேதிகே தலைவர் பிரபாகர் கூறுகையில், ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்றபோது அவரை விடுவிக்க அவன் வைத்த முக்கிய கோரிக்கைகளில் ஒன்று திருவள்ளுவர் சிலையைத் திறப்பதாகும் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications