இடைத் தேர்தலில் கலைஞருக்கும், திமுகவுக்கும்தான் வெற்றி - எஸ்.வி.சேகர்
குற்றாலம்: வருகிற இடைத் தேர்தலில் திமுகவுக்கும், கலைஞருக்கும்தான் வெற்றி கிடைக்கும். தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பது என்று ஜெயலலிதா எடுத்துள்ல முடிவு தற்கொலைக்கு சமமாகும் என்று கூறியுள்ளார் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள எஸ்.வி.சேகர்.
குற்றாலத்தில் நடைபெறும் சாரல் விழாவில் எஸ்.வி.சேகர் குழுவின் நாடகம் இடம் பெறுகிறது. இதற்காக குற்றாலம் வந்துள்ள எஸ்.வி.சேகர், தட்ஸ்தமிழுக்காக தொலைபேசி மூலம் சிறப்புப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
அதிமுக தலைமை என்னை அவசரப்பட்டு நீக்கியது போல் நான் அவசரப்பட மாட்டேன். எனது எம்எல்ஏ பதவி பறிபோகலை. நான் மாற்று அணிக்கு போவது குறித்து உடனே தீர்மானிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
அரசியலில் நிதானம் தேவை...
அரசியலில் அவசரம் கூடாது. மிகவும் நிதானம் தேவை. முற்படுத்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஜெயலலிதா பொது செயலாளராக இருக்கும் கட்சியில் முற்படுத்தப்பட்ட எனக்கு இடமில்லை. அவங்க மட்டும் இருந்தால் போதுமா...? இக்கட்சியில் அதிக அநியாயம் முற்படுத்தப்பட்டவர்களுக்கே நடக்குது.
ஜெ.வின் செயல் தற்கொலைக்குச் சமம்...
5 சட்டமன்ற தொகுதியில் தேர்தலை புறக்கணிப்பதாக கூறும் செயல் தற்கொலைக்கு சமம். தேர்தலை தைரியமாக சந்திக்க வேண்டும். இவர்கள் போட்டியிடாமல் ஓதுங்குவது வாக்கு எண்ணிக்கையின் போது விஜயகாந்த் இரண்டாவது இடத்துக்கு வந்து விடுவார்.
இடைத் தேர்தலில் கலைஞருக்கும்-தி்முகவுக்கும்தான் வெற்றி. இனியாவது ஜெ சிந்தித்து செயல்பட்டால் கட்சி நல்லாயிருக்கும். இல்லை சசிகலா குடும்பம் மட்டும்தான் நல்லாயிருக்கும்.
ஜெயலலிதா தேர்தலை புறக்கணிக்க சொல்கிறாரே, யாருக்கும் ஓட்டு போடாதீங்க என்று சொல்வது இந்திய ஜனநாயக உரிமையை மறுக்கும் செயல். இவர் தேர்தல் ஆணையை மீறி செயல்படுகிறாரே, இவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்க முடியாது...கூடாது?
விஜயகாந்த்துக்குத்தான் யோகம்...
எம்ஜிஆரால் தொடங்கப்பட்டு இரட்டை இலையையும், அதிமுகவையும் நம்பியுள்ளவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்...? விஜயகாந்துக்குதான் யோகம்.
இடைத் தேர்தலில் என்றுமே ஆளும் கட்சிதான் வெற்றி பெறும். காரணம் அரசின் சலுகைகள் தங்களுக்கு கிடைப்பது போய் விடக் கூடாது என்பதுதான் காரணம்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் காஞ்சிபுரம், கும்மிப்பூண்டி, தொகுதிகளில் வெற்றி பெற்றார்களே. அப்போதும் இயந்திர வாக்கு பதிவுதானே இருந்தது?.
குழந்தைத்தனமான பேச்சு...
5 தொகுதிகளிலும் தி்முக வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு ஆலோசனை சொல்கிறாரே... இவர் தேர்தல் ஆணையராக இருந்தால் அப்படி அறிவிக்கலாம். இது குழந்தைதனமான பேச்சு.
10 பேர் சுயேட்சைகளாக தேர்தலில் போட்டியிட்டாலும் தேர்தலை நடத்த வேண்டும் என்பது ஆணைய விதி. அது தெரியாதா..? இவங்க போட்டியிடவில்லை என்றால் தேர்தலை நடத்தக் கூடாது. தமிழ்நாட்டில் எத்தனையோ கட்சிகளில் அதிமுகவும் ஒரு கட்சி. நான் மட்டும்தான் இருக்கிறேன் என்று பேசக் கூடாது.
அதிமுக ஓட்டு எங்களுக்கு கிடைக்கும் என்று தா.பாண்டியன் சொல்கிறார். அதிமுக சட்டசபையில் வெளிநடப்பு செய்தபோது இவர்கள் வெளிநடப்பு செய்யவில்லை. இவர்களை பற்றி தொண்டனுக்கு தெரியாது.
ஜெ. இஷ்டப்படி இனி ஆட மாட்டார்கள் ...
அதி்முக தொண்டர்கள் இந்த அம்மா இஷ்டப்படி எல்லாம் இனி ஆடமாட்டார்கள். அரசியல் வியாபாரம் இல்லை. இதற்கு முன் எனக்கு நல்லது நடந்தது. இனியும் நல்லதே நல்லபடியாக நடக்கும் என்றார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications