கிளின்டன்-கிம் பேச்சு: இரு யுஎஸ் நிருபர்களும் விடுதலை

இது இரு நாடுகளுடனான உறவின் மாபெரும் திருப்பமாகக் கருதப்படுகிறது.
பில் கிளின்டன் காலத்தில் துணை அதிபராக இருந்த அல்-கோர் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கியுள்ள கரண்ட் டிவியில் பணியாற்றி வந்த இயூனா லீ, லாரா லிங் ஆகிய இரு பெண் நிருபர்களும் கடந்த மார்ச் மாதத்தில் சீன-வட கொரிய எல்லையில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோது வட கொரிய ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
வட கொரியாவை உளவு பார்த்ததாக இருவரும் கைதாகினர். இருவரையும் 12 ஆண்டுகள் சிறையில் அடைத்தது வட கொரிய ராணுவ அரசு.
இதையடுத்து அவர்களை மீட்க வட கொரியா அதிபருடன் பேச்சு நடத்த விருப்பம் தெரிவித்தார் பில் கிளின்டன். கிளின்டனின் கோரிக்கையை கிம் ஜோங் ஏற்றார்.
இதைத் தொடர்ந்து நேற்று தென் கொரியா வந்த கிளின்டன் சிறப்பு விமானத்தில் வட கொரிய தலைநகர் பியோங்யாங் சென்றார்.
இரு தலைவர்களும் நேற்று மாலை சந்தித்துப் பேசினர். அப்போது இரு நிருபர்களும் அனுமதியில்லாமல் வட கொரிய எல்லைக்குள் நுழைந்ததை கிம் விளக்கினார். அதற்காக கிளின்டன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இதையடுத்து இரு நிருபர்களுக்கும் பொது மன்னிப்பு அளிப்பதாக கிம் அறிவித்தார்.
மேலும் தனது இந்தச் சந்திப்புக்கு அமெரிக்க அரசின் ஆதரவும் இருப்பதாகத் தெரிவித்த கிளின்டன் இரு நாட்டு உறவுகளை மேம்படுத்த தன்னால் ஆன அனைத்தையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்கா விதித்துள்ள தடைகள், வட கொரியாவுக்கு விடுத்து வரும் மிரட்டல்கள் குறித்து கிம் தெரிவித்த வருத்ததையும் கிளின்டன் பகிர்ந்து கொண்டதாகவும், இந்த மோதல் போக்கை இரு நாடுகளும் படிப்படியாக கைவிட வேண்டியதன் அவசியத்தை விளக்கினார்.
நிருபர்களின் விடுதலைக்காக வட கொரியாவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவும் நன்றி தெரிவித்துள்ளதோடு இரு நாட்டு உறவு வலுப்பட பாடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications