போலீசுக்கு மயக்க மருந்து கொடுத்து 6 கைதிகள் ஓட்டம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் துர்காபூர் காவல் நிலையத்தில் போலீசாருக்கு குளிர் பானத்தில் மயக்கமருந்து கொடுத்து 6 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள துர்காபூர் துணை சிறையில் பிஜோய் சிங், விக்கி சிங், தர்மேந்திர பர்வான், சந்தோஷ் பர்ன்வால், சின்டு சிங், ராஜேந்திர சிங் உள்ளிட்ட 6 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று இந்த சிறைக்கு இரண்டு மோட்டார் பைக்குகளில் வந்த 5 பேர் தங்களது நண்பர் பிஜோய் சிங்கிற்கு பிறந்த நாள் என்றும், அவரை பார்க்க வேண்டும் எனவும் கூறி முறைப்படி அனுமதி கேட்டனர்.
இதையடுத்து அவர்கள் பிஜோய் சிங்கை பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அப்போது அவர்கள் பிஜோய் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு போலீசாருக்கு குளிர் பானம் வழங்குவதாக கூறினர். பின்னர் போலீசாருக்கு மயக்கமருந்து கலந்த குளிர் பானங்களை கொடுத்தனர்.
அதை குடித்த போலீசார் மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவர்கள் சிறையில் இருந்த பிஜோய் சிங் உள்ளிட்ட 6 கைதிகளையும் அழைத்து கொண்டு தப்பியோடினர். மயக்கம் தெளிந்து எழுந்த போலீசார் அருகில் இருக்கும் காட்டு பகுதியில் அவர்களை தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications