ஆதரவாளர்களுடன் இன்று திமுகவில் இணைகிறார் அனிதா ராதாகிருஷ்ணன்
சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் இன்று தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைகிறார்.
தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர் அனிதா.ஜெயலலிதா அமைச்சரவையில் வீட்டு வசதித்துறை அமைச்சராகவும் இருந்தார்.
கடந்த மாதம் 29-ந் தேதி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணன் நீக்கப்பட்டார்.
இதையடுத்து முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்துப் பேசினார். அப்போது திமுகவில் தான் இணையவிருப்பதாக பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதை சபாநாயகர் ஆவுடையப்பன் ஏற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் இன்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் வைத்து ஆயிரக்கணக்கானோருடன் திமுகவில் இணைகிறார் அனிதா.
அவருடன் 20 ஆயிரம் தொண்டர்கள் வரவுள்ளனராம். பிரமாண்டமான முறையில் இணைப்பு விழா நடைபெறுகிறது.
இதுகுறித்து அனிதா கூறுகையில், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைவதற்காக திருச்செந்தூர் தொகுதியில் இருந்து 114 பஸ்கள், 70 வேன்கள், 300 கார்கள், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 3 சிறப்பு பெட்டிகள் என சுமார் 20 ஆயிரம் தொண்டர்களுடன் சென்னை வருகிறேன் என்றார்.
அனிதாவின் வருகையையொட்டி அண்ணா அறிவாலயம் களை கட்டியுள்ளது.
-
மேட்டுப்பாளையம் திமுக வேட்பாளர் மீது அதிருப்தி.. சுயேச்சையாக போட்டியிடும் முக்கிய நிர்வாகி -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications