தமிழகத்தை 'ஸ்வைன்' புகலிடமாக்கி விட்டது திமுக-ஜெ.
சென்னை: தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் பன்றி காய்ச்சல் மக்களை பீதியடைய செய்து வருகிறது. திமுகவின் கவனக்குறைவால் தமிழகம் நோய்களின் புகலிடமாக மாறிவிட்டது. இதை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை என அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
மருத்துவ சேவை மற்றும் நோய் தடுப்பில் முன்னணி மாநிலமாக விளங்கிய தமிழகம் இன்று நோய்களின் புகலிடமாக விளங்குவதில் முன்னணியில் இருக்கிறது. நோய் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைய திமுக அரசு எடுக்காததே இதற்கு காரணம்.
தற்போது பன்றி காய்ச்சல் நோய் தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னையில் வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழக மக்கள் மிகவும் பீதியடைந்து இருக்கிறார்கள்.
இந்தியாவில், மும்பை மற்றும் புனே நகரங்களில் தீவிரமாக இருந்த பன்றி காய்ச்சல் நோய் தற்போது தமிழகத்தில் பரவ ஆரம்பித்து விட்டது.
சென்னையை சேர்ந்த சஞ்சய் என்ற 4 வயது சிறுவன் உள்பட மொத்தம் 6 பேர் இந்தியாவில் பன்றி காய்ச்சல் நோய்க்கு இதுவரை பலியாகி உள்ளனர். சென்னையில் சுமார் 46 பேருக்கு பன்றி காய்ச்சல் நோய் இருப்பதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
சென்னை பரிசோதனை நிலையம் செயலிழந்துவி்ட்டது...
இதுபோன்ற பரிசோதனைகளை மேற்கொள்ளக் கூடிய ஒரே நிலையம் சென்னை, கிண்டியில் உள்ள நோய் தடுப்பு கிங் மருந்து நிலையம் தான்.
ஆனால், தற்போது இந்த நிலையத்தில் இந்த நோயை பரிசோதிப்பதற்கான பரிசோதனை கருவிகள் பற்றாக்குறை காரணமாக, இந்த நிலையமே செயலிழந்து உள்ளது என்ற அளவில் செய்திகள் வெளி வருகின்றன. தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலரும் இதை உறுதி செய்துள்ளார்.
ஏற்கனவே சென்னையைச் சேர்ந்த 46 பேருக்கு பன்றி காய்ச்சல் இருக்கின்ற இந்த சூழ்நிலையில், பரிசோதனை கருவிகள் இல்லை என்று கூறுவது அரசின் நிர்வாக திறமை இன்மையையே காட்டுகிறது.
மெத்தனமும், அலட்சியமும் தான் காரணம்...
இரண்டு மாதங்களுக்கு முன்பே பன்றி காய்ச்சல் குறித்து பரவலாக பேசப்பட்டு வந்த சூழ்நிலையில், இந்த நோய் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்யக்கூடிய கருவியைக் கூட இருப்பில் வைத்திருக்காதது அரசின் மெத்தனப் போக்கையும், அலட்சியப் போக்கையும், முன்எச்சரிக்கை இன்மையையுமே காட்டுகிறது.
போர்க்கால நடவடிக்கை...
எனவே, பன்றி காய்ச்சல் நோய் மேலும் பரவாமல் தடுக்க தேவையான உபகரணங்களையும், மருந்துகளையும் அதிக அளவில் இருப்பில் வைத்துக் கொள்ளவும், பன்றி காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை மக்களிடைய ஏற்படுத்த வேண்டும்.
தேவையான உடனடி நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்குமாறு தமிழக மக்களின் சார்பில் திமுக அரசின் முதல்வர் கருணாநிதியை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என் அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications