காவிரி மின் திட்டங்கள்-4 மாநில கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் நான்கு நீர் மின் உற்பத்தி திட்டங்களை தேசிய நீர் மின் கழகம் அமலாக்கத் திட்டமிட்டுள்ளது.
ஓகேனக்கலில் 120 மெகாவாட், கர்நாடகத்தில் சிவசமுத்திரம், 270 மெகாவாட், மேகதாது 400 மெகாவாட் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
இந்த திட்டங்களின் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை இரு மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என்று தேசிய நீர் மின் கழகம் கூறிவந்தது.
இது தொடர்பாக கடந்த ஆண்டு மத்திய மின்துறை இணையமைச்சராக ஜெய்ராம் ரமேஷ் இருந்த போது கர்நாடக முதல்வர் எதியூரப்பா மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்நிலையில் இதில் இருந்து சிவசமுத்திரம் திட்டத்தை நீக்க வேண்டும் என்று கர்நாடக அரசு கூறி வருகிறது. அதை தாங்கள் தனியாக அமைக்க போவதாகவும், அதில் கிடைக்கும் மின்சாரம் தங்களுக்கே முழுமையாக வேண்டும் என்றும், மற்ற திட்டங்களை இணைந்து செய்து அதை பிரித்து கொள்ளலாம் என்றும் கூறி வருகிறது. ஆனால், தமிழக அரசு இதற்கு சம்மதிக்கவில்லை.
இந்நிலையில் தற்போது இது குறித்து விவாதிக்க மத்திய அரசு, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டம் வரும் 17ம் தேதி மத்திய மின்துறை செயலர் ஹரிசங்கர் பிரம்மா தலைமையில் நடக்கவிருக்கிறது.
இதில் 4 மாநில தலைமைச் செயலர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications