சென்னையில் இன்று மீண்டும் நிலநடுக்கம்
சென்னை: அந்தமான் அருகே இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சென்னை நகரிலும் இன்று கட்டடங்கள் குலுங்கின.
அந்தமான் அருகே கடல் பகுதியில் இன்று பகல் 2.51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 5.7 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் சென்னையிலும் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தை அடையாறு, தியாகராய நகர், பட்டினப்பாக்கம் உள்பட பல பகுதிகளில் உணர முடிந்தது.
இந்த நிலநடுக்கத்தால் பட்டினப்பாக்கத்தில் 8 மாடிக் கட்டடம் குலுங்கியதால் அதிலுள்ள அலுவலங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு இறங்கி ஓடினர்.
அதே போல தி.நகர், அடையாறு உள்பட பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. கட்டடங்களில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு 1.26 மணியளவில் அந்தமானுக்கு வடக்கே கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் உணரப்பட்டது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது.
அந்த நிலநடுக்கத்தின் தொடர்ச்சி தான் (aftershock) இன்றைய நிலநடுக்கம் என்று நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மைய அதிகாரி கோபால் கூறினார்.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications