உயர்நீதிமன்றம்-மனைவியை வெட்ட பாய்ந்த கணவர்!
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் விவாகரத்து கேட்டு மனு செய்த மனைவியை அவரது கணவர் அரிவாளால் வெட்டப் பாய்ந்தார். இதையடுத்து அவரது மாமியார் குறுக்கே புகுந்து மருமகனை தடுத்து நிறுத்தி மகளைக் காப்பாற்றினார்.
மருமகன் கையில் இருந்த அரிவாளை தடுத்து நிறுத்தியதில் அவரது கையில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கிரனேத் (41) என்பவரின் மகள் ரெஜீனா (20). இவரது கணவர் வடிவேல் (23). வடிவேலுடன் வாழப் பிடிக்காத ரெஜீனா, விவாகரத்து கோரி குடும்ப கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
நேற்று பிற்பகல் 12 மணியளவில் வழக்கு விசாரணைக்காக தனது தாயாருடன் ரெஜீனா கோர்ட்டுக்கு வந்தார். விசாரணையில் ஆஜரான அவர் பின்னர் வெளியே வந்தார்.
கோர்ட்டை விட்டு வெளியேறுவதற்காக தாயாரும், மகளும் வந்தபோது, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்தி்ற்குப் பின்புறம், மரத்துக்குப் பின்னால் மறைந்திருந்த வடிவேல் வேகமாக அங்கு வந்தார். கையில் அரிவாளுடன் வந்த அவர் கையில் வைத்திருந்த அரிவாளால் ரெஜீனாவை வெட்ட முயன்றார்.
இதைப் பார்த்து அலறிய கிரனேத், வடிவேலுக்குக் குறுக்கே பாய்ந்து அவரது கையில் இருந்த அரிவாளைப் பிடித்துக் கொண்டார். அவரைத் தள்ளி விட்டு விட்டு வெட்ட முயன்ற வடிவேலின் முயற்சி தோற்றது. அதற்குள் அங்கு
கூட்டம் கூடி விட்டது.
இதைப் பார்த்த வடிவேல் அரிவாளை கீழே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். அரிவாளை அழுத்தமாக பிடித்ததாலும், அது கையை அழுத்தியதாலும் கிரனேத்தின் கையில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து உயர்நீதிமன்ற போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தப்பி ஓடி விட்ட வடிவேலுவைத் தேடி வருவதாக இன்ஸ்பெக்டர் மன்சூர் அலி தெரிவித்தார்.
வடிவேல் - ரெஜீனா விவகாரம் குறித்து போலீஸார் கூறுகையில், இருவரும் ஆறு மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். சொந்த வீட்டில் வசித்து வந்தனர். வடிவேலுடைய குடும்பத்தை விட ரெஜீனாவின் குடும்பம் சற்று வசதியானது. இதனால் வடிவேலுவுக்கு தாழ்வு மனப்பான்மை இருந்துள்ளது. மேலும் அவருக்கு வேலையும் இல்லை. இதனால் அவருக்கும், ரெஜீனாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.
கருத்து வேறுபாடு முற்றியதால் கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்து ரெஜீனா குடும்ப கோர்ட்டில் மனு செய்தார். இதனால் ஆவேசமடைந்த வடிவேல், ரெஜீனாவைக் கொல்ல முடிவு செய்து அரிவாளுடன் வந்துள்ளார். ஆனால் கிரேனத்தின் செயலால் அது தடுக்கப்பட்டு விட்டது என்றனர்.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications