2 தீவிரவாத அமைப்புகள் மோதல்-பாக்.கில் 70 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தாலிபான் மற்றும் பிடானி தீவிரவாத அமைப்புகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சுமார் 70 பேருக்கு மேல் பலியானார்கள்.
பாகிஸ்தானின் வடமேற்கே, ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் இருக்கும் வசிர்ஸ்தான் பகுதியில் தாலிபான் தீவிரவாதிகள் முகாம் அமைத்துள்ளனர்.
சமீபத்தில் இந்த முகாமில் அமெரிக்க விமானங்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் தாலிபானின் பாகிஸ்தான் பிரிவு தலைவர் பைதுல்லா மெக்சுத் மரணமடைந்தார். ஆனால், தாலிபான்கள் தொடர்ந்து இதை மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தெற்கு வசிர்ஸ்தான் பகுதியில் உள்ள ஜான்டோலா பகுதியில் தாலிபான் தீவிரவாதிகளுக்கும், பாகிஸ்தான் அரசுக்கு ஆதரவான துர்கிஸ்தான் பிடானி என்ற தீவிரவாத பிரிவினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் சுமார் 70 பேர் வரை பலியானதாக பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
பிடானி அமைப்பினர் சுமார் 90 பேர் வரை பலியாகிவிட்டதாக கூறுகின்றனர். ஆனால், இதை துல்லியமாக சொல்ல முடியவில்லை. குறைந்தது 70 பேர் பலியாகி இருப்பார்கள் என கருதுகிறோம்.
இந்த மோதலில் சுமார் 40 வீடுகள் தரைமட்டமாகியது. தாலிபான்கள் தான் முதலில் தாக்கியுள்ளனர். மோதலின் போது தீவிரவாதிகள் கையெறி குண்டுகள், ராக்கெட் ஏவுகணைகள் ஆகியவற்றை பயன்படுத்தியுள்ளனர் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications