பிற வங்கி ஏடிஎம்களை 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம்!
மும்பை: எந்த ஏடிஎம்மிலும் பணம் எடுக்கலாம், கட்டணமில்லை என்ற அறிவிப்பு வெளியானதும் கார்டும் கையுமாக ஏடிஎம் வாசல்களில் க்யூவில் காத்திருப்பவர்கள் உற்சாகத்தில் துள்ளினர்.
இப்போது அந்த அறிவிப்பில் ஒரு மாறுதல்... பிற வங்கிகளின் ஏடிஎம்களில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுவரை குறிப்பிட்ட வங்கியின் ஏடிஎம் அட்டைகளை மற்ற வங்கி ஏடிஎம்களில் பயன்படுத்தினால் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் ரூ.20 முதஸ் 75 வரை வங்கிக்கேற்ப கட்டணம் விதிக்கப்பட்டு வந்தது.
இதனால் குறிப்பிட்ட வங்கியின் தானியங்கி பணம் வழங்கும் கருவியைத் தேடி அலைந்தனர் மக்கள். பல ஏடிஎம்களில் பெரிய க்யூ நீள்வது வாடிக்கையாக இருந்தது.
இந்த நிலையில்தான், அரசு வங்கி, தனியார் வங்கி என்ற பேதமில்லாமல், எந்த வங்கியின் கார்டாக இருந்தாலும் அதை வைத்து கட்டணமின்றி பணம் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இப்போது அதிலும் ஒரு மாறுதல்... குறிப்பிட்ட வங்கியின் அட்டையை பிற வங்கி ஏடிஎம்களில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படுமாம். அக்டோபர் மாதத்திலிருந்து இந்த புதிய திருத்தம் அமலுக்குவரும் என்று அனைத்து வங்கிகள் சங்கத்தின் துணை தலைமை அலுவலர் உன்னிகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
இதற்கு ரிசர்வ் வங்கியும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியாவில் மொத்தம் 80 அரசு, தனியார், கூட்டுறவுத் துறை சேர்ந்த வங்கிகளின் 40000க்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் உள்ளன.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications