சிறுமிக்கு திருமணம்-தடுத்து நிறுத்திய கலெக்டர்
நாமக்கல்: சேந்தமங்கலம் அருகே பதினான்கு வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் வருவாய்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
மனு அனுப்பிய தியாகிகள்...
நாமக்கல் மாவட்டத்தில் பொட்டணம் என்ற கிராமத்தில் பால்ய விவாக திருமணம் 24 ம் தேதி திங்கள் கிழமை நடைபெற உள்ளது, அந்த திருமணத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகள் சிலர் மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு அனுப்பினர்.
இது பற்றி விசாரிக்குமாறு நாமக்கல் ஆர்.டி.ஓ.ராஜனுக்கு, கலெக்டர் சகாயம் உத்தரவிட்டார்.
இதில் முசிறியை சேர்ந்த ராஜேந்திரன் மகள் கௌசல்யா (14) என்ற சிறுமிக்கும், பொட்டணத்தை சேர்ந்த செந்தில் (28) என்ற வாலிபருக்கும் மண்மலை என்ற கிராமத்தில் நேற்று திருமணம் நடக்க இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, ஆர்.டி.ஓ. ராஜன் உத்தரவின் பேரில் மண்மலை கிராமத்திற்கு விரைந்த வருவாய்துறையினர் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
பின்பு இது குறித்து, ஆர்.டி.ஓ. ராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கொல்லிமலை சுற்றுவட்டார மலைக் கிராமங்களில் இது போன்ற பால்ய விவாகங்கள் அதிகளவில் நடக்கின்றன. அதை தடுத்து நிறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகள் சிலர் புகார் மனு அனுப்பிருந்தனர்.
மேலும், நேற்று நடக்க இருந்த பால்ய விவாகம் மாவட்ட கலெக்டர் உத்திரவின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டது. பால்ய விவாகத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து அந்த சிறுமியி்ன் பெற்றோர்களுக்கு விளக்கி கூறப்பட்டது.
மேலும், இப் பகுதியில் பால்ய விவாகம் குறித்து விசாரணை நடத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications