செப். 2 முதல் மருந்துக் கடைகளில் டாமிப்ளூ விற்பனைக்கு அனுமதி
டெல்லி: பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை நூறை நெருங்கி வரும் நிலையில் அதற்குரிய மருந்தான டாமிப்ளூவை மருந்துக் கடைகள் மூலம் விற்பனைக்கு அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. செப்டம்பர் 2ம் தேதி முதல் திறந்த மார்க்கெட்டில் டாமிப்ளூ கிடைக்கும் என தெரிகிறது.
இதுகுறித்து இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநர் சுரீந்தர் சிங் கூறுகையில், பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து வகையான ஒசெல்டமிவிர் (Oseltamivir) மருந்து விற்பனையை திறந்த மார்க்கெட்டில் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
இதுதொடர்பான முறையான அனுமதி அறிவிப்பு இன்னும் 10 அல்லது 12 நாட்களில் வெளியாகும். சில்லரை மருந்துக் கடைகளில் இந்த மருந்துகள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும்.
இந்த மருந்தைத் தயாரிக்கும் லைசென்ஸ், ரான்பாக்ஸி, சிப்லா, மெட்கோ, ஹெடிரோ, ஸ்டிரைட்ஸ், ரோச் ஆகிய நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மருந்துகளைத் தயாரித்து, விநியோகம் செய்வார்கள் என்றார்.
இதற்கிடையே, மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் உள்ள 34 மாவட்டங்களில் 22 மாவட்டங்களில் பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது. இதில் அதிகம் பாதிப்புகளைச் சந்தித்திருக்கும் மாவட்டங்கள் புனே, மும்பை, நாசிக் ஆகியவைதான்.
மகாராஷ்டிராவுக்கு அடுத்த அதிக உயிர்ப் பலி ஏற்பட்டுள்ளது கர்நாடகத்தில்தான்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications