சர்ச் வாளகத்தில் இளம்பெண் எரித்து கொலை
ஆரல்வாய்மொழி: ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் எரிந்த நிலையில் பெண் சடலம் கிடந்தது. இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரல்வாய்மொழியில் தேவசாகயம் மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலயம் உள்ளது. இங்குள்ள தேவசாகயம் பிள்ளை சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தை காண தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது உண்டு. பலர் அங்கு தங்கி வழிபடுவர். இதற்காக தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது.
விடுதியை ஓட்டி கழிப்பிடம் ஓன்று உள்ளது. இதற்கு செல்லும் பாதையில் இன்று காலை 30 வயது மதிக்கத்தக்க ஒருவரின் உடல் எரிந்த நி்லையில் கிடந்தது. இவர் யார், எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை.
பக்கத்தில் மண்எண்ணெய் கேனும், தீப்பெட்டியும் கிடந்தது. சடலம் கிடந்த இடத்தில் இருந்து சில அடி தூரத்தில் ஒரு பை கிடந்தது. அதில் சில சேலைகளும், மணிபர்சில் டிக்கெட்டும் இருந்தது.
தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பெண்ணை யாராவது கடத்தி வந்து எரித்தார்களா, அல்லது கொலையான பெண்ணை இங்கே கொண்டு வந்து எரித்தார்களா, என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்தை பார்வையிட்ட எஸ்பி சண்முகவேல் கூறுகையில் விசாரணை மற்றும் பரிசோதனையின் அறிக்கையின் முடிவில் கொலை என தெரியவந்தால் குற்றவாளிகளை உடனடியாக பிடிப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications