சத்தியமங்கலத்தில் ஏழு மாநில கமாண்டோ படையினருக்கு பயிற்சி
சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில், ஏழு மாநிலங்களை சேர்ந்த கமாண்டோ படையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தமிழக அதிரடிப்படை ஐஜி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் 82 பேருக்கு சமீபத்தில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இதை தொடர்ந்து கடந்த மாதம் 24 ம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50 வனக்காப்பாளர்களுக்கு ஏழு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் நிறைவு விழா புதுபீர்கடவு வனப்பகுதியில் நடைபெற்றது.
விழாவில் தமிழக அதிரடிப்படை ஐஜி சைலேந்திரபாபு கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழக அதிரடிப்படை சத்தியமங்கலம், மேட்டூர், ஒகேனக்கல், பழனி, ராஜபாளையம், மணிமுத்தாறு, பொன்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.
அவர்கள் தமிழக வனப்பகுதிகளில் முழுமையாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் தீவிரவாதிகளோ, சமூக விரோதிகளோ இல்லை.
இதுவரை வனப் பொருள்களை கொள்ளையடிக்கும் எட்டு பேரை கைது செய்துள்ளோம். வனக்காப்பாளர்களுக்கு புதுவிதமான பயிற்சிகள் கற்று தரப்பட்டுள்ளது. இது, அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இங்கு இந்தியாவின் ஏழு மாநிலங்களை சேர்ந்த கமாண்டோ படையினருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications