ஜெ. மீதான ரூ. 2 கோடி பரிசு வழக்கு-சிபிஐக்கு உத்தரவு
சென்னை: ரூ. 2 கோடி பரிசுப் பொருள் வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்குமாறு சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1992ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவருக்கு ரூ.2 கோடி அளவுக்கு வங்கி டி.டிக்கள் மூலம் பரிசு வழங்கப்பட்டது.
அதை அரசு கஜானாவில் சேர்க்காமல் தனது வங்கிக் கணக்கில் இருப்பு வைத்துக் கொண்டார் ஜெயலலிதா.
பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக இந்த விவகாரத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்தது. பின்னர் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
ஜெயலலிதா தவிர முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோருக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த 2006ம் ஆண்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந் நிலையில் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜெயலலிதா சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 13(2), 13(1)(இ) ஆகியவற்றின் கீழ் முதலில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்தது. பின்னர் சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இவ்வாறு மாற்றம் செய்வதற்கு தமிழக அரசுக்கு அதிகாரமில்லை.
இந் நிலையில் விசாரணை நடத்திய சிபிஐ, ஊழல் தடுப்புச்சட்டம் பிரிவு 11ன் கீழ் என் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இது விதிகளை மீறிய செயலாகும்.
கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் கட்சியினர் என் மீது கொண்ட அன்பு, பாசம், விசுவாசம் காரணமாக வழங்கிய பரிசுப் பொருட்கள் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகாது.
எனக்கு எதிராக வழக்கு தொடர சபாநாயகர் அனுமதி வழங்கியதும் சட்டப்படி செல்லாது.
எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை. எனவே என்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி முகமது இசாத்அலி முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி வரும் 16ம் தேதிக்குள் இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இதற்கிடையே இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்ய காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications