For Daily Alerts
Just In
தங்கம் விலை மேலும் உயர்வு... விற்பனை குறைந்தது!
சென்னை: தங்கத்தின் விலை இரண்டாவது வாரமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்ததால் கிராம் ரூ.1500-ஐ நெருங்குகிறது. இன்றைய பிற்பகல் நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ 11728 ஆக உள்ளது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை 1466 ஆக உள்ளது. நாளை இதே நிலை தொடர்ந்தால், ஒரு கிராம் விலை 1500-ஐக் கடந்துவிடும்.
ரமஜான் பண்டிகைக்குள் நிச்சயம் சவரன் ரூ.12000-ஐத் தாண்டிவிடும் என்றும், நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் தங்கம் விலை குறைய இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
அடுத்த மாதமே தீபாவளிப் பண்டிகை வருவதால் அப்போது இன்னும் விலை அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாகவும் சென்னை நகர நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கம் விலை அளவுக்கு அதிகமாக உயர்ந்து வருவதால் நகைக்கடைகளிலும் பண்டிகைக் கால விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.