10 பைலட்டுகள் நீக்கம்... பயணிகள் அவதி தொடர்கிறது!

இதுவரை 160 விமானங்களின் சேவை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையங்கலில் தவிக்கிறார்கள்.
ஏர் இந்தியா மற்றும் சில தனியார் விமான நிறுவனங்கள் கூடுதலாக விமானங்களை இயக்கி நிலைமையைச் சமாளித்து வருகின்றன.
கடந்த வாரம் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் 2 பைலட்டுகளை வேலையிலிருந்து நீக்கியது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் சேர்க்கவேண்டும் என்று வலியுறுத்தியும் நாடு முழுவதுமுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவன பைலட்டுகள் 600பேர் திடீரென மாஸ் லீவ் எடுத்தனர்.
இதனால் 160 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் உடல் நிலையை காரணம் கூறி விடுப்பில் போன பைலட்டுகளை ஜெட் நிறுவன அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதில் 8 பைலட்டுகள் சொன்ன காரணம் உண்மையில்லை என்று அறிந்த நிர்வாகம் 8பேரையும் பணி நீக்கம் செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.
இதோடு சேர்த்து இதுவரை 10 பைலட்டுகள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள் என்று பைலட்டுகள் காத்திருந்த நிலையில் நிர்வாகம் மேலும் 8 பைலட்டுகளை பணிநீக்கம் செய்தது மற்ற பைலட்டுகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பயணிகள் சேவை பாதிக்கப்படுவதினால் பைலட்டுகளை மீண்டும் வேலைக்கு திரும்பவைக்க தேவையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளது.ஆனால் பேச்சுவார்த்தை இப்போதைக்கு தொடங்குவதாகத் தெரியவில்லை.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications