பலத்த எதிர்ப்புக்கிடையே காங்கிரஸில் சேர்ந்தார் ரோஜா!

மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியைச் சந்தித்து, நேற்று செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணித் தலைவியாக இருந்த ரோஜா, சித்தூர் மாவட்டம், நகரி, சந்திரகிரி தொகுதிகளில் இரண்டுமுறை போட்டியிட்டுத் தோற்றார்.
சொந்தக் கட்சியினரே தன்னைத் தோற்கடித்து விட்டதாகக் குற்றம் சாட்டிய அவர் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைய திட்டமிட்டரா.
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைவதற்கு சில தினங்களுக்கு முன், அவரைச் சந்தித்து, காங்கிரசில் தன்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில், ராசியில்லாத அவரை கட்சியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என ஆந்திர காங்கதிரசார் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்குமேல் சும்மா இருந்தால், 'ஜோலியை முடித்துவிடுவார்கள்' என பயந்த ரோஜா, நேற்று ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியைச் சந்தித்தார். காங்கிரஸ் கட்சியில் முறைப்படி சேர்ந்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், "தெலுங்கு தேச கட்சியிலிருந்து நான் விலகுவதாக, அதன் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் அனுப்பி விட்டேன். 10 ஆண்டுகளாக எனக்கு ஆதரவு அளித்த அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி காங்கிரஸ் கட்சிதான் எனக்கு எல்லாமும். அந்தக் கட்சிக்காக உழைப்பேன்!" என்றார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications