மதுரையில் பெண் பலியான சம்பவம் - முன்விரோதத்தால் சுட்ட போலீஸ்காரர் கைது

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் போலீஸ்காரர் வைத்திருந்த துப்பாக்கி தவறாக வெடித்ததால் பெண் பலியானதாக கூறப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக, வேண்டும் என்றே அந்தப் பெண்ணை போலீஸ்காரர் சுட்டுக் கொன்றதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

அவரால் சுட்டுக் கொல்லப்பட்ட பெண்மணி போலீஸ்காரரின் பெரியம்மா என்றும் தெரிய வந்துள்ளது. சொத்துத் தகராறில் இந்தக் கொலை நடந்துள்ளது.

மதுரை டிஆர்ஓ காலனி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மனைவி சவுந்தரவள்ளி (58). மதுரை மாநகராட்சியில் பியூனாக இருந்த பாண்டி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார்.

சவுந்தரவள்ளிக்கு பால்பாண்டி, நாகராஜன், சுரேஷ், கணேசன் ஆகிய 4 மகன்கள் உள்ளனர். எனினும், சவுந்தரவள்ளி தனியாக வசித்து வந்தார். இவர், பென்ஷன் வாங்குவதற்காக மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கருவூலத்திற்கு நேற்று மதியம் நடந்து வந்தார்.

அப்போது அவர் மீது பயங்கர சத்தத்துடன் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அவரது மார்பை துளைத்து வெளியேறிய குண்டு, சுவரில் பாய்ந்து 3 அங்குல பள்ளத்தை ஏற்படுத்தியது. சவுந்தரவள்ளி 7அடி தூரம் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

சத்தம் கேட்டு மக்கள் குண்டு வெடித்ததாக கருதி திரண்டனர். சவுந்தரவள்ளி கருப்பு சேலை அணிந்து இருந்ததால், அவர் மனித வெடிகுண்டாக இருக்கலாமோ என்ற பீதியும் ஏற்பட்டது.

போலீஸ் கமிஷனர் நந்தபாலன், துணை கமிஷனர்கள் தேன்மொழி, ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சவுந்தரவள்ளி வைத்திருந்த பையில் பென்ஷன் பெறுவதற்கான ஆவணங்கள் இருந்தன.

மாநகராட்சியில் வங்கி, கருவூலம் மற்றும் முக்கிய அலுவலகங்கள் இருப்பதால், சுழற்சி முறையில் தலா 4 போலீசார் 24மணி நேரமும் பாதுகாப்பில் இருப்பார்கள். சம்பவம் நடந்த இடத்தின் கீழ் பகுதியில் அவர்களுக்கு தனி அறை உள்ளது.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸ் கமிஷனர் நந்தபாலன், அறையில் இருந்த ஆயுதப்படை போலீஸ்காரர் சதீஷ் குமாரை (26) விசாரித்தார். தனது துப்பாக்கியை துடைத்தபோது குண்டு வெளிப்பட்டு சவுந்தரவள்ளி பலியானதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், தகவலறிந்து சவுந்தரவள்ளியின் மருமகள் பத்மா (30) கதறியபடி வந்தார். அவரிடம் போலீசார் விசாரித்தபோது, சதீஷ்குமார் சவுந்தரவள்ளியின் சகோதரி உமாவின் மகன். அவர் ஏற்கனவே மனநலம் பாதித்து சிகிச்சை எடுத்துக் கொண்டவர் என தெரிந்தது. இவர்கள் குடும்பத்தில் சொத்து பிரச்னை உள்ளது.

மேலும், சதீஷ்குமார் சவுந்தரவள்ளியிடம் ரூ.20ஆயிரம் கேட்டுள்ளார். இதில் ஏதும் பிரச்னை ஏற்பட்டு, இச்சம்பவம் நடந்ததா என தெரியவில்லை என்று பத்மா கூறினார்.

இதையடுத்து, போலீசார் மீண்டும் சதீஷ்குமாரிடம் துருவி,துருவி விசாரித்தனர். இதில் சதீஷ்குமார் திட்டமிட்டே சவுந்திரவள்ளியை சுட்டுக் கொன்றது தெரிந்தது.

சதீஷ்குமாரின் தாயார் உமா, சவுந்தரவள்ளி உடன்பிறந்த சகோதரிகள். இவர்களுக்கு இடையே நீண்ட காலமாக சொத்து பிரச்னை இருந்துள்ளது. சதீஷ்குமார் குடும்பத்திற்கு எதிராக சவுந்தரவள்ளி செயல்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று பென்ஷன் வாங்க வந்தபோது சதீஷ்குமாரை பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டு சவுந்தரவள்ளி பேசாமல் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் தனது துப்பாக்கியால் சவுந்தரவள்ளியை சுட்டுக் கொன்றது தெரிந்தது.

இதைத்தொடர்ந்து சதீஷ்குமாரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர். ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சவுந்தரவள்ளி குடும்பத்திற்கு ரூ.1லட்சம் நிவாரண உதவி வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+