5 முறை ஒசாமாவை சந்தித்த நவாஸ்!-மாஜி ஐஎஸ்ஐ அதிகாரி தகவல்

இது குறித்து பாகிஸ்தானின் உளவுத்துறையின் (ஐஎஸ்ஐ) முன்னாள் அதிகாரியும், தற்போதைய மனித உரிமை இயக்க பாதுகாப்ப தலைவருமான காலித் குவாஜா, டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியிஸ்,
ஒசாமா பின் லேடன் கேட்டு கொண்டதை அடுத்து, அவரும், அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் சந்தித்து பேச நான் ஏற்பாடு செய்தேன். அவர்கள் இருவரும் இதுவரை 5 முறையாவது சந்தித்திருப்பார்கள்.
இந்த சந்திப்பை யார் மறுத்தாலும், அது உண்மை என்பதை என்னால் நிரூபிக்க முடியும். அதற்கான வலுவான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது.
இந்த விஷயத்தில் நவாஸ் ஷெரீப் பொய் சொல்லமாட்டார். இந்த உண்மையை ஒத்துக்கொள்வார் என நினைக்கிறேன். நான் ஒசாமாவை நூறு முறைக்கு மேல் சந்தித்துள்ளேன். அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பின்னர் நான் அவரை பார்க்கவில்லை என்றார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியினர் மறுத்துள்ளனர். அக்கட்சியின் தகவல் செயலாளர் அக்ஸன் இக்பால் கூறுகையில், இது அடிப்படையில்லாத குற்றச்சாட்டு என்றார்.


Click it and Unblock the Notifications
