தலாய் லாமாவின் அருணாச்சல் பயணம்- சீனா எதிர்ப்பு

அருணாச்சல் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடி பேசி வருகிறது சீனா. இதுதொடர்பாக இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே விரிசல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், அருணாச்சல் பிரதேசத்திற்கு வருகிற நவம்பர் மாதம் செல்லவுள்ளார் தலாய் லாமா. இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் தலாய் லாமாவின் பயணத்தைத் தடுக்க முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அருணாச்சல் பிரதேசத்தில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசத் திட்டமிட்டுள்ளார் தலாய் லாமா.
இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அதிகாரி ஜியாங் ஜூ கூறுகையில், அருணாச்சல் பிரதேசத்திற்கு தலாய் லாமா செல்வது, சீனா எதிர்ப்புப் போக்கை மேலும் அதிகப்படுத்தும். பிரிவினைவாத பயணம் இது.
அருணாச்சல் பிரதேசம் என்று ஒன்று இல்லை. எனவே லாமாவின் இந்தப் பயணத்தை உறுதியாக எதிர்க்கிறோம் என்றார்.
சீனாவின் இந்த விதண்டாவாதத்திற்குப் பதிலளித்துள்ள இந்தியா, அருணாச்சல் பிரதேச விவகாரத்தில், சீனாவுக்கு எந்த உரிமையும் கிடையாது. சீனாவின் எதிர்ப்பு தேவையற்றது. இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் போய் வரும் உரிமை தலாய் லாமாவுக்கு உண்டு என்று கூறியுள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications